விவிலிய இறை ஏவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 96:
 
எனவேதான், விவிலியம் "மனித மொழியில் அமைந்த இறைவாக்கு" என்று அழைக்கப்படுகிறது.
 
==விவிலிய இறை ஏவுதல் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம்==
 
1962-1965இல் நடந்தேறிய [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்]] விவிலிய நூல்கள் இறை ஏவுதலால் எழுதப்பட்டன என்னும் உண்மையை "இறை வெளிப்பாடு" என்னும் ஏட்டில் கீழ்வருமாறு எடுத்துக் கூறுகிறது:
{{cquote|விவிலியத்தில் அடங்கியுள்ளவையும் அதில் வெளிப்படுபவையுமான இறைவெளிப்பாட்டு உண்மைகள் தூய ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டவையாகும். பழைய, புதிய ஏற்பாட்டு நூல்கள் யாவும், அவற்றின் எல்லாப் பாகங்களும் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டுள்ளவை (காண்க: யோவான் 20:31; 2 திமொத்தேயு 3:16; 2 பேதுரு 1:19-21; 3:15-16); கடவுளையே தங்கள் ஆசிரியராகக் கொண்டுள்ளவை; அவை அப்படியே திருச்சபைக்கு வழிவழியாக வந்துள்ளவை. தூய அன்னையாம் திருச்சபை திருத்தூதர்களின் நம்பிக்கையைப் பின்பற்றி அவற்றைத் தூயனவாகவும், திருமுறையைச் சார்ந்தனவாகவும் ஏற்றுக் கொள்கிறது. விவிலிய நூல்களை உருவாக்க கடவுள் மனிதர்களைத் தேர்ந்துகொண்டார். கடவுளே, அவர்களில், அவர்கள் வழியே செயலாற்ற, அவர்கள் தங்கள் திறமையையும் வல்லமையையும் பயன்படுத்தி அவர் விரும்பிய எல்லாவற்றையும், அவற்றை மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்ற முறையில் எழுத்தில் வடிக்குமாறு அவர்களைப் பயன்படுத்தினார்.
ஆகவே கடவுளால் ஏவப்பட்ட ஆசிரியர்கள் அல்லது திரு எழுத்தாளர்கள் உறுதியாய்க் கூறும் யாவும் தூய ஆவியால் உறுதியாய்க் கூறப்படுவதாகக் கொள்ளவேண்டும். இதன் காரணமாக, நம் நிறைவாழ்விற்காகக் கடவுள் இத்தூய நூல்களில் அடக்க விரும்பிய உண்மையையே விவிலிய நூல்கள் நமக்கு உறுதியுடனும் உரிமையுடனும் தவறின்றியும் போதிக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், "மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறுகிறார்" (காண்க: 2 திமொத்தேயு 3:16-17, கிரேக்க மூலம்)<ref>''இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்'', தமிழ் மொழிபெயர்ப்பு, "இறை வெளிப்பாடு", எண் 11 (பதிப்பு: தேடல் வெளியீடு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2001).</ref>}}
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விவிலிய_இறை_ஏவுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது