இந்தியத் தேசிய இராணுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இரண்டாம் உலகப் போர் சேர்க்கப்பட்டது using HotCat
சிNo edit summary
வரிசை 1:
'''இந்திய தேசிய ராணுவம்''' (''Indian National Army'' - INA, ''Azad Hind Fauj'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டம் உலகப் போரின்]] போது [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய]] அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய ராணுவத்தின் இந்திய [[போர்க்கைதி]]கள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.
 
1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரல்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், மோகன் சிங் என்பவரது தலைமையில் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல்
நேதாஜி [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போசினால்]] புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் [[இந்திய இடைக்கால அரசு|இந்திய இடைக்கால அரசின்]] படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக [[மலேசியப் போர்த்தொடர்|மலேசிய]] மற்றும் [[பர்மா போர்த்தொடர்|பர்மா]] போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது பரப்புரைத் தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான [[ஐஎன்ஏ வழக்குகள்|வழக்குகளும்]] இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தேசிய_இராணுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது