"காவடியாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,572 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Kaavadiyaaddam_Jaffna.jpg|thumb|right|250px|நேர்த்திக்காகக் காவடியெடுக்கும் பக்தர்கள்]]
 
'''காவடியாட்டம்''' என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். [[இலங்கை|இலங்கையிலும்]], [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலும்]], தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. [[முருகன்]] கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் [[கரகாட்டம்|கரகாட்டத்தின்]] ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது<ref>பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 157</ref><ref>குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26</ref>. . .
 
==சொற்பிறப்பு==
 
இது தவிர உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர். காவடி எடுப்பவர் முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கினால் அது "பறவைக் காவடி" எனப்படும். இருக்கும் நிலையில் தொங்குவது "தூக்குக் காவடி" ஆகும். பறவைக் காவடியிலும், தூக்குக் காவடியிலும் காவடி எடுப்பவர் சுமையைத் தோளில் சுமப்பதில்லை. ஆனால், அவரே காவுதடியில் சுமை போல் சுமக்கப்படுவதைக் காணலாம்.
 
==காவடி ஆட்டத்துக்கான இசை==
காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக [[நாதசுரம்|நாதசுரமும்]], [[தவில்|தவிலும்]] விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது.
 
==தொழில்முறைக் காவடியாட்டம்==
தொழில்முறைக் காவடியாட்டம், தற்போது தனி நிகழ்ச்சியாக அன்றிக் கரகாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாகவே இடம்பெற்று வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டத்தில், ஆடுபவர், சுழன்றாடுதல், வளைந்தாடுதல், குனிந்தாடுதல், வில்லாடுதல், கைவிரித்து ஆடுதல், வரவேற்க ஆடுதல் என்னும் ஆறு முறைகளைப் பயன்படுத்தி ஆடுவது வழக்கம்<ref>பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 159</ref>. தோளின்மீது காவடியை வைத்து ஆடும் மரபு வழிக்குப் புறம்பாக தொழில்முறைக் காவடியாட்டக் கலைஞர்கள் தமது உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் காவடியை வைத்து ஆடுகிறார்கள்<ref>குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26</ref>. இதைவிட காவடியுடன் ஏணிமீது ஏறுதல் போன்ற சாகசச் செயல்களையும் செய்து காட்டுகிறார்கள்.
 
== காவடி வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/919230" இருந்து மீள்விக்கப்பட்டது