"24 மனை தெலுங்குச்செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,943 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
* வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்
 
==வினோத வழிபாடுகள்: மயானக்கொள்ளை, காமாட்சியம்மன் நோன்பு==
==வினோத வழிபாடு==
 
மயானக்கொள்ளை
 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின்படி, பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்ததால் கோபமடையும் சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் சிவபெருமானின் கரத்தில், பிரம்ம கபாலம் ஒட்டிக் கொள்கிறது. இந்தக் கபாலம் சிவபெருமானுக்குப் படைக்கும் உணவை உண்டு விடுவதால், பசியால் பித்து பிடித்து காடுமலைகளில் அலைந்து திரியும் சிவபெருமான், மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.
மறுநாள் காலை இங்கு நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியில் பார்வதியின் அம்சமான அங்காளம்மன், சிவனுக்குப் படைக்கும் உணவை எடுக்க வரும் பிரம்ம கபாலத்தை, அங்காளபரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து தரையில் மிதித்து ஆட்கொள்கிறார். சிவபெருமானின் சாபம் நீங்குகிறது. இந்தப் புராணத்தை நினைவு கூறும் நிகழ்ச்சி, எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் மகாசிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக மயானக்கொள்ளை என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
24 மனை தெலுங்கு செட்டியார்களில் பலர் அங்காளபரமேஸ்வரி அம்மனைக் குல தெய்வமாக வழிபடுபவர்கள். கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூரில் கோலையார் கோத்திரத்தைச்சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினருக்குப் பாத்தியப்பட்ட குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோவிலிலும் மகாசிவராத்திரியை அடுத்து இரண்டாம் நாள் விழாவாக மயானகொள்ளை நிகழ்ச்சி நள்ளிரவில் கொண்டாடப்படுவது வழக்கம். அங்காளம்மன் விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் எழுந்தருளி, மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
 
கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வரும்போது, எலும்பை மாலையாக அணிந்து கொண்டு சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடும் பூசாரிகள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுப்பது வழக்கம். இது போன்ற வினோத பழக்கம் மேல்மலையனூர் உட்பட எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து நடைபெறும் சடங்காகும்.
 
<ref>[http://thatstamil.oneindia.in/news/2000/03/07/sudali.html சிவராத்தி: கோவையில் தொடரும் விநோத பழக்கம்]</ref>
காமாட்சியம்மன் நோன்பு
24 மனை தெலுங்கு செட்டியார்கள் அன்னை காமாட்சியம்மனை தங்களின் சமூக குலதெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் சார்பில் பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆண்டுதோறும் காமாட்சியம்மன் வழிபாட்டு நோன்பு அல்லது திருவிழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நோன்பில் முற்றிலும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வர். இது ஆண்கள் மட்டும் கடைப்பிடிக்கும் நோன்பு ஆகும். எனவே இந்த நோன்பில் கண்டிப்பாக பெண்களுக்கு அனுமதியில்லை. பிற சமூகத்தினருக்கும் அனுமதியில்லை.
 
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் தோப்பு அல்லது வயல்காடுகளில் இந்த நோன்பு நடைபெறுவது வழக்கம். பாம்பு புற்றில் இருந்து மண் எடுத்து . வந்து சாமி செய்து, தென்னம்பாளையால் அலங்கரித்து, காமாட்சியம்மனாக பாவித்து வழிபடுவார்கள். பின்பு காமாட்சியம்மனுக்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் கிடா வெட்டி பூஜை செய்வார்கள். பூஜைக்குப்பின் சமையல் செய்வது, பரிமாறுவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்வது ஆண்கள்தான். மீதமான . உணவுகளையும் இவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. மாறாக .அங்கேயே குழி தோண்டிப் புதைத்து விடுவது வழக்கம்.
 
<ref>[http://thatstamil.oneindia.in/news/2000/03/07/sudali.html சிவராத்தி:சிவராத்திரி கோவையில் தொடரும் விநோத பழக்கம்]</ref>
 
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/920900" இருந்து மீள்விக்கப்பட்டது