"ஆர்எச் குருதி குழு முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஆர்எச் குருதி குழு முறைமை''' (''Rh blood group system'') என்பது தற்போது அறியப்பட்டுள்ள 30 [[மனிதரில் குருதிக் குழு முறைமைகள்|குருதிக் குழு முறைமைகளில்]] குறிப்பிடத்தக்க ஒன்றாகும். [[ஏபிஓ குருதி குழு முறைமை]]க்கு அடுத்தபடி முக்கியமானதாக இந்த முறைமை கருதப்படுகின்றது. இந்த ஆர்எச் குருதி குழு முறைமையில் தற்போது 50 குருதிக்குழு [[பிறபொருளெதிரியாக்கி]]கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், D, C, c, E, e ஆகிய ஐந்து பிறபொருளெதிரியாக்கிகளே மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆர்எச் காரணி (Rh factor), ஆர்எச் நேர் (Rh positive), ஆர்எச் எதிர் (Rh negative) என்ற பதங்கள் பிறபொருளெதிரியாக்கி D ஐயே குறிக்கும். ஆர்எச் நேர் என்பது ஆர்எச் காரணி உள்ள [[குருதி]]யையும், ஆர்எச் எதிர் என்பது ஆர்எச் காரணி அற்ற குருதியையும் குறிக்கும்.
 
இந்த ஆர்எச் குருதி குழு முறைமையின், முக்கியமாக D பிறபொருளெதிரியாக்கியின், முக்கியத்துவமானது [[குருதி மாற்றீடு|குருதி மாற்றீட்டின்]]போது மட்டுமன்றி, [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பில்]], புதிதாகப் பிறக்கும் [[குழந்தை]]யில் ஏற்படக்கூடிய Hemolytic disease of the newborn or erythroblastosis fetalis என்ற நிலையிலும் மிகவும் முக்கியமாக இருக்கின்றது. தகுந்த சோதனைகள் மூலம், ஆரம்பத்திலேயே இந்நிலை தோன்றக்கூடும் என்பதை எதிர்வுசொல்வது இலகுவாக இருப்பதனால், இந்த நிலைக்கு முதலிலேயே தடுப்பு நடவடிக்கை செய்வது அவசியமாகும்.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/924478" இருந்து மீள்விக்கப்பட்டது