யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
 
[[1927]] ஆம் ஆண்டு மாநாட்டில் [[மகாத்மா காந்தி]] கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|சி. இராசகோபாலாச்சாரி]], எஸ். சத்தியமூர்த்தி, போன்ற பல இந்திய விடுதலைப் போராட்டப் பெரியார்கள் வருகை தந்து [[கீரிமலை]], யாழ்ப்பாண முற்றவெளி, ரிட்ச்வே மண்டபம் போன்ற இடங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார்கள்<ref name="north">குலரத்தினம், க. சி., ''நோத் முதல் கோபல்லவா வரை'', சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008</ref>. [[1931]] இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை இந்திய காங்கிரஸ் சோசலிஸக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான [[கமலாதேவி சட்டோபத்தியாயா]] திறந்து வைத்து உரையாற்றினார்.
 
===முதலாவது மாநாடு===
[[1924]] டிசெம்பரில் இளைஞர் காங்கிரஸ் அதன் முதலாவது மகாநாட்டை நடத்தியது. அது நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு;
* தாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிக்க முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரசானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமய நிறுவனங்களிடையே வேறுபாடு காட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லையென்றும் காங்கிரசின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக் கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம் சார்ந்த எந்த விடயமும் கிளப்பக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சியமைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும்,
* நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும்
* தேசிய இலக்கியத்தைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாரத்தில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களையாவது செலவிடுவதென காங்கிரசின் அங்கத்தவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதியொன்றைச் செய்து கொள்வதென்றும்,
* தேசிய இலக்கியம், கலை, இசைத்துறைகளில் அவற்றின் மீட்பிற்கு வேண்டிய தன்னாக்கப்படைப்பினைத் தோற்றுவிக்கும் எவருக்கும், பரிசு, பதக்கம் அன்றேல் யாதுமொரு ஊக்குவிப்பினை காங்கிரஸ் கொடுக்கவேண்டுமென்றும்,
* [[அறிவியல்]], புனைகதை, சமூகவரலாறு, வாழ்க்கை ஆகிய துறைகளில் தேசிய இலக்கியத்தை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை உண்டாக்குவதற்கு செயற்குழுவினால் ஐந்து அங்கத்தினரைக் கொண்ட குழுவை நியமிப்பதென்றும்,
* தென்னிலங்கையில் [[தமிழ்|தமிழும்]], வட இலங்கையில் [[சிங்களம்|சிங்களமும்]] படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும் என்றும்,
* இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் நோக்குகளை வெகுசனத்திற்கு விளக்கவும், மது ஒழிப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளினை அவர்களுக்குப் புகட்டவும் வேண்டிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கென பிரசுரக்குழுவொன்றைத் தோற்றுவிப்பதென்றும்,
* காங்கிரஸ் அங்கத்துவர்கள் இயன்றளவு உள்ளுர் வர்க்கத்தையும், கைத்தொழில்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பாக அந்நிய சவர்க்காரம், வாசனைத்திரவியங்கள், பூசல் மா, மது, சிகரெட் ஆகியவற்றை வாங்காது தவிர்க்க வேண்டுமென்றும், இக்காங்கிரஸ் தீர்மானிக்கிறது” எனப் பிரகடனப்படுத்திற்று<ref>[http://www.noolaham.net/project/01/49/49.htm யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு], பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]], [[நூலகம் திட்டம்]]</ref>.
 
==அரசாங்க சபைத் தேர்தல் ஒன்றியொதுக்கல்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இளைஞர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது