யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்''' (''Jaffna Youth Congress'') என்பது [[இலங்கை]]யில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[1924]] ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் [[1926]] ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசாகப் பெயர் மாற்றப்பட்டது.
 
முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்து அதற்கான நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசைச்காங்கிரசையே சாரும்<ref name="AT">[http://www.atimes.com/ind-pak/CI22Df02.html SRI LANKA: THE UNTOLD STORY], K T Rajasingham</ref>. ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இவ்வமைப்பில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.
 
==உறுப்பினர்கள்==
இவ்வமைப்பில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் [[ஹண்டி பேரின்பநாயகம்]], ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" சி. எஸ். நவரத்தினம், ஏ. இ. தம்பர், "ஒரேற்றர்" சுப்பிரமணியம், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் எஸ். குலேந்திரன், [[பி. நாகலிங்கம்]] (பின்னர் [[இலங்கை செனட் சபை|செனட்டர்]]) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபராக இருந்த பி. ஜி. எஸ். குலரத்தின என்பவரை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது<ref name="AT"/>.
 
==மாநாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இளைஞர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது