டாலர்கள் முப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
'''டாலர்கள் முப்படம்''' ("Dollars Trilogy", {{lang-it|Trilogia del dollaro}}) அல்லது '''பெயரில்லா மனிதன் முப்படம்''' ("Man with No Name Trilogy"), என்பது [[செர்ஜியோ லியோனி]]யின் இயக்கத்தில் [[கிளின்ட் ஈஸ்ட்வூட்]] நடிப்பில் வெளியான மூன்று இத்தாலியத் திரைப்படத் தொகுதியினைக் குறிக்கின்றது. அவையாவன: ''[[எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்]]'' (1964), ''[[ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்]]'' (1965), மற்றும் ''[[தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி]]'' (1966).
 
முதலில் வெளியான ''[[எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்]]'' [[அகிரா குரோசாவா]]வின் ''[[யொஜீம்போ]]'' (1961) இன் அனுமதி பெறாத மறுஆக்கமாகும். லியோனி இம்மூன்று படங்களும் தனித்து நிற்கவே விரும்பினார். அவை கதைத் தொடர்ச்சியுடன் ஒரு முப்படத்தின் அங்கமாகக் கருதப்படும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பார்வையாளர்களும், திரைப்பட வரலாற்றாளர்களும் இம்மூன்று படங்களையும் “பெயரில்லா மனிதன்” பாத்திரத்தின் சாகசங்களைச் சொல்லும் முப்படத்தின் அங்கங்களாகவே கருதுகின்றனர். ”பெயரில்லா மனித”னாக நடித்திருந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட் மூன்று திரைப்படங்களிலும் ஒரே மாதிரியான ஒப்பனை, பாவனைகளைக் கொண்டிருந்தார்.
 
”பெயரில்லா மனிதன்” என்ற கருத்துரு முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. மூன்று இத்தாலியப் படங்களையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றி அமெரிக்காவில் வெளியிட முனைந்த அதன் அமெரிக்க விநியோகிப்பாளர்கள் சந்தைப் படுத்துதலுக்காக “பெயரில்லா மனிதன்” என்ற கருத்துருவை உருவாக்கினர். ஈஸ்ட்வுட்டின் பாத்திரத்தின் பெயர் மூன்று படங்களிலும் குறிப்பிடப்படவில்லையென்றாலும் மூன்றிலும் வெவ்வேறு செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறான்.
"https://ta.wikipedia.org/wiki/டாலர்கள்_முப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது