கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
இவ்வூர், வஞ்சி, வஞ்சிமுற்றம் என்னும் பெயர்களாலும் சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டது. இதன் வழியில் தோன்றியதே கருவூரிலுள்ள வஞ்சியம்மன் கோயில்.
==சோழனின் கருவூர் முற்றுகை கைவிடப்பட்டது==
கருவூர் அருகில் தண் ஆன்பொருநை (அமராவதி இக்கால வழக்கு) ஆறு பாய்ந்தது. அந்த ஆற்று மணலில் அக்காலத்தில் மகளிர் தெற்றி விளையாடுவர். (அண்மைக் காலத்தில் விளையாடப்பட்ட பாண்டி விளையாடுதான் சங்ககாலத் தெற்றி விளையாட்டு). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை முற்றியிருந்தான். கருவூர் அரசன் சேரன். அவனது காவல்மரம் போந்தை எனப்பட்ட பனை. சோழன் அதனைக் கோடாரியால் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தான். இதனை வெட்டும் ஓசை அவ்வூர் அரசனுக்கு நன்றாகக் கேட்டது. கேட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் சோழனுக்குப் பயந்து சேரன் கருவூர் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டிருந்தான். இப்படி அஞ்சுபவனோடு போரிடுவது நாணத்தக்க செயல் என்று புலவர் ஆலத்தூர் கிழார் சோழனுக்கு அறிவுரை கூறினார். சோழனும் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினான். {{Reflist}}<ref>ஆலத்தூர் கிழார் புறநானூறு 36</ref>
 
==சேரன் கருணை==
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது