"ஆர்எச் குருதி குழு முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
[[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], [[தாய்|தாயின்]] குருதியும், சேயின் குருதியும் நேரடியாகக் கலப்பது இல்லையென்பதால் அவை இரண்டும் ஒவ்வாமை வகைகளாக இருப்பினும், வேறு ஏதாவது குறிப்பான நிலைகளில் குருதிக்கலப்பு ஏற்படாத வரையில், ஆபத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. பொதுவாக தாயிடமிருந்து [[முதிர்கரு]]விற்குத் தேவையான [[ஊட்டச்சத்து]], [[ஆக்சிசன்]] போன்றன [[நஞ்சுக்கொடி]] ஊடான கடத்தலாலேயே நிகழும். ஆனாலும் [[கருச்சிதைவு]], [[கருக்கலைப்பு]], [[குழந்தை பிறப்பு]] போன்ற பிரத்தியேகமான நிலைமைகளில் தாயினதும், சேயினதும் குருதிகள் கலப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். அந்நிலையில் குருதியில் ஒவ்வாமை இருப்பின், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்நோய் நிலையானது மிதமான அளவிலிருந்து, தீவிரமான நிலைவரை வேறுபடலாம்.
 
பொதுவாக இந்நோய் நிலையானது Rh- தாய்க்கு Rh+ குழந்தை முதலில் உருவாகி (அதற்கு தந்தை Rh+ ஆக இருந்திருப்பார்), இரண்டாவது அல்லது அதைத் தொடர்ந்து வரும் கருத்தரிப்பிலேயே நிகழும். தாய்க்கு Rh- இருப்பதனால், முதலாவது [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பின்போது]] தாய், குழந்தையின் குருதிக்கு வெளிப்படுத்தப்பட்டால், அங்குள்ளகுழந்தையிலுள்ள Rh+ பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான எதிர்-Rh (anti-Rh antobody) பிறபொருளெதிரி தாயில் உருவாகும். இந்த பிறபொருளெதிரியானது IgG யாக இருக்க முடியும். தாயில் இருக்கும் அந்த பிறபொருளெதிரியானது, மீண்டும் ஒரு Rh+ குழந்தை உருவாகினால், நஞ்சுக்கொடியூடாக கடத்தப்பட்டு குழந்தையில் உள்ள Rh பிறபொருளெதிரியாக்கியுடன் தாக்கமுற்று நோய் நிலையை ஏற்படுத்தும்.
 
==மக்கள்தொகையில் Rh பரம்பல் தரவுகள்==
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/928259" இருந்து மீள்விக்கப்பட்டது