தேசியப் பாடசாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
1990 ஆம் ஆண்டு ஏதேனும் ஒரு பாடசாலை தேசிய பாடசாலையாக உயர்த்தப்படுவதற்கு அன்றேல் தேசிய பாடசாலையொன்றைத் தொடர்ந்து நடாத்துதற்குக் கீழ்வரும் தகுதிகளை உடைத்தாயிருக்க வேண்டும்.
 
#1. தேசிய பாடசாலையாவதற்குக் குறைந்தளவு மாணாக்கர் தொகை (2000) இரண்டாயிரமோ அன்றேல் அதற்கு மேற்பட்ட தொகையோ இருக்க வேண்டும். அத்தொகையில் ஆரம்பப் பிரிவில் (தரம் 1-6) மாணாக்கர் தொகை குறைந்தளவு ஆயிரம் (1000) ஆகவேணும் இருக்க வேண்டும்.
#2. வகுப்பொன்று அரச மாணாக்கர் வரவுப் பதிவேட்டில் 30 மாணாக்கர்களையேனும் உள்வாங்கியிருக்க வேண்டும். அதில் சாதாரண வரவு 30 இனை அடைந்திருக்க வேண்டும்.
#3. மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு விஞ்ஞானப் பிரிவில் 100 மாணாக்கர்களோ அதற்கு மேற்பட்டோ இருக்க வேண்டும். ஏனைய பிரதேசங்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட மாணாக்கர் கல்வி கற்க வேண்டும்.
#4. பாடசாலையில், தொழிநுட்பப் பாடங்களில் பாடத்திட்டத்திற்குட்பட்ட பாடங்கள் நான்கேனும் கற்பிப்பதற்கான வசதியிருக்க வேண்டும்.
(விவசாய விஞ்ஞானம், மரவேலை, வர்த்தகமும் கணக்கியலும், மோட்டார் இலத்திரனியல் உட்பட்ட பாடத்திட்டத்திற்குட்பட்ட பாடங்களில் நான்கையேனும் கற்பித்தல்)
#5. பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணாக்கருக்கும், சாதாரண தர வகுப்பு மாணாக்கருக்கும் போதியளவிலான விஞ்ஞான ஆய்வுகூட வசதியிருத்தல் வேண்டும்.
#6. பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட ஏனைய பாடசாலைகளிலும் வரவேற்புப் பெற்ற பாடசாலையாக இருத்தல் வேண்டும். (இவ்விடயத்தில் கீழ்வருவன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.)
#6.1 தற்போதுள்ள நிலையில் பாடசாலையின் ஒழுக்கம்
#6.2 பெற்றோரின் பங்களிப்பும் வளங்களைப் பயன்படுத்தும் தன்மை.
#6.3 பாடங்களில் உள்ளார்ந்த மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளின் எண்ணிக்கை
#6.4 கடந்த மூன்றாண்டுகளில் க.பொ.த. (உ..த)ப் பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கரில், ஒவ்வோராண்டும், தோற்றிய பாடங்களில் 40 சதவீதம் பெற்றிருத்தல். அல்லது கூடுதலானோர் பல்கலைக் கழக நுழைவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை பெற்றிருத்தல்.
#6.5 கடந்த மூன்றாண்டுகளில் சமூக அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்பு. (எ.கா. – வீடமைப்பு, சிறிய பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல், பெற்றோர் பாதுகாவலர் போன்று பங்களித்தல், சமூகத் திட்டங்களுடன் கூடிய செயற்பாடுகள்)
#6.6 பிரதேசத்தின் புகோள அமைப்பு விரிந்துகொடுக்கும் தன்மையுடையதாய் இருத்தல் ஃ பாடசாலையின் சுற்றளவு போதுமானதாக இருத்தல்.
#6.7 பிரதேசத்தின் சனத்தொகைக்கேற்ப பாடசாலையை மேலும் விரிவாக்குவதற்கு முடியுமாயிருத்தல்.
#7. கடந்த மூன்றாண்டுகளில் பாடசாலை அபிவிருத்திக்காக தூரநோக்குடன் கூடிய பாடசாலை அபிவிருத்திச் சங்கமொன்று மற்றும் பழைய மாணாக்கர் சங்கமொன்று இருத்தல். இவ்விடயத்தில் கீழ்வருவன கவனத்திற் கொள்ளப்படும்.
# * நடாத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை
#* வரவு
#* செயற்பாடுகள்
#* பண பலம்
 
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பாடசாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது