பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்''' அல்லது '''பிறந்த குழந்தைகள், முதிர்கருக்களில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்''' (HDN - Hemolytic Disease of the Newborn) என்பது தாயின் குருதிக்கும், சேயின் குருதிக்கும் ஏற்படக்கூடிய ஒரு ஒவ்வாமை நிலையில், தாயில் உருவாகும் IgG வகை [[பிறபொருளெதிரி]]யானது [[நஞ்சுக்கொடி]]யின் ஊடாக [[முதிர்கரு]]வுக்குக் கடத்தப்படுவதனாலோ, அல்லது [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பில்]] ஏற்படும் அசாதாராண நிலையில் தாயின் குருதி சேயின் குருதியுடன் கலப்பதனாலோ முதிர்கருவில் அல்லது பிறக்கும் குழந்தையில் ஏற்படக்கூடிய ஒரு [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] செயற்பாட்டினால், [[குருதிச் சிவப்பணு]]க்கள் சிதைவடைதலாகும். [[கருச்சிதைவு]], [[கருக்கலைப்பு]], [[குழந்தை பிறப்பு]] போன்ற பிரத்தியேகமான நிலைமைகளில் தாயினதும், சேயினதும் குருதிகள் கலப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படுவதனால், இந்நிலைகளில், இந்த நோய்நிலை உருவாகலாம்.
 
இந்த குருதிச் சிவப்பணு சிதைவினால், குழந்தைகளில் [[குருதிச்சோகை]], [[மஞ்சள் காமாலை]], [[முதிர்கரு நீர்கோர்வை]] (Hydrops fetalis) அதனால் ஏற்படக்கூடிய உடல் வீக்கம் (Edema), [[பிறந்த குழந்தையில் மூளை பாதிப்பு]] (Kernicterus) போன்ற நிலைகள் ஏற்படலாம்<ref name=CH>[http://www.childrenshospital.org/az/Site1006/mainpageS1006P1.html Children's Hospital Boston]</ref>. இது மிதமான அளவில் இருந்து, தீவிரமான நிலைமை வரை வேறுபடலாம். மிகத் தீவிரமான நிலையில் [[இதயம்]]<ref>[http://www.ucsfbenioffchildrens.org/pdf/manuals/42_Hemol.pdf UCSF Children's Hospital]</ref> பாதிக்கப்பட்டு, [[இறப்பு]]ம்<ref>[http://www.rightdiagnosis.com/h/hemolytic_disease_of_the_newborn/intro.htm Right Diagnosis]</ref> ஏற்படலாம்.
வரிசை 29:
பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோயானது வெவ்வேறு காரணிகளால் ஏற்படலாம்.
===ஏபிஓ ஒவ்வாமை ===
தாயினதும், சேயினதும் குருதிகள் நேரடியாகக் கலப்பதில்லையாதலால் குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான ABO குருதி வகை ஒவ்வாமை காரணமாக பொதுவாக [['பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்]]' உருவாவதில்லை. [[ஊட்டச்சத்து]]க்களும், [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] தாயிலிருந்து சேய்க்கும், [[காபனீரொக்சைட்டு]], ஏனைய கழிவுப்பொருட்கள் சேயிலிருந்து தாய்க்கும் [[நஞ்சுக்கொடி]] ஊடாகவே கடத்தப்படுகின்றது. ABO இரத்த வகையின் பிறபொருளெதிரிகள் பொதுவாக IgM வகையைச் சேர்ந்தவையாக இருப்பதுடன், இவை [[நஞ்சுக்கொடி]]யினூடாக செல்வதில்லை. எனவே தாயிலிருந்து சேய்க்கு பிறபொருளெதிரிகள் கொண்டு செல்லப்படுவதில்லை.
 
ஆனாலும் குறைந்த வீதத்தில் ABO HDN உருவாகலாம்<ref>http://www.obgyn.net/english/pubs/features/presentations/panda13/ABO-Rh.ppt</ref>. சிலசமயம் தாயில் காணப்படும் O- குருதி வகை, '''IgG''' வகையான ABO பிறபொருளெதிரிகளை உருவாக்கும். அவை நஞ்சுக்கொடியூடாக கடத்தப்பட்டு, பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படக் காரணமாகின்றன. அரிதாக இருப்பினும், சிலசமயம் A<ref name="Wang">Wang, M, Hays T, Ambruso, DR, Silliman CC, Dickey WC. Hemolytic Disease of the Newborn Caused by a High Titer Anti-Group B IgG From a Group A Mother. Pediatric Blood & Cancer 2005;45(6): 861-862</ref>,<ref name="Jeon">Jeon H, Calhoun B, Pothiawala M, Herschel M, Baron BW. Significant ABO Hemolytic Disease of the Newborn in a Group B Infant with a Group A2 Mother. Immunohematology 2000; 16(3):105-8.</ref> மற்றும் B<ref name="Haque">Haque KM, Rahman M. An Unusual Case of ABO-Haemolytic Disease of the Newborn. Bangladesh Medical Research Council Bulletin 2000; 26(2): 61-4.</ref> குருதி வகையுள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகளிலும் இந்த ABO HDN என்னும் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படுகின்றது.