"போலந்து படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== விளைவுகள் ==
ஒரே மாதத்தில் போலந்து வீழ்ந்ததும், சோவியத் ஒன்றியம் நாசி ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்ததும் மேற்கத்திய நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. போலந்தால சில மாதங்கள் தாக்குப்பிடிக்க இயலும் என்று நம்பியிருந்த நேச நாட்டுப் படைகள் போலந்துக்கு உறுதியளித்திருந்த படி ஜெர்மனியின் மேற்கு எல்லையில் தாக்கத் தயாராக இல்லை. அதற்கான மன உறுதியும் அந்நாடுகளின் அரசுகள் கொண்டிருக்கவில்லை. ஜெர்மனியின் போலந்துத் தாக்குதல் துவங்கியவுடன் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கெல்லையில் [[சார் படையெடுப்பு|சார்லாந்தைத் தாக்கினாலும்]] அதனைப் பாதியிலேயே கைவிட்டு விட்டன. நேச நாடுகளின் இந்த மந்த நிலைப்பாடு ஜெர்மனிக்கு தைரியமூட்டியதுடன் பிரிட்டனையும் பிரான்சையும் எளிதில் வென்று விடலாம் என்று நம்பிக்கையும் அளித்தது.
 
ஜெர்மானியப் படையெடுப்பு போர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. போர் வரலாற்றில் [[மின்னலடித் தாக்குதல்]] உத்திகள் பெருமளவில் கவச படைகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது இதுவே முதல் முறை. குண்டுவீசி வானூர்திகள், கவச தாக்குதல்கள், ஊடுருவி சுற்றி வளைத்தல் அகியவற்றை வெற்றிகரமாக பெருமளவில் நடத்தி ஒரு மாத காலத்தில் போலந்தை வீழ்த்தியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியையும் வியப்பினையும் ஏற்படுத்தியது. இப்படையெடுப்பு [[ஒட்டுமொத்தப் போர்]]க் கோட்பாட்டின் ஒரு நடைமுறைப் படுத்துதலாக அமைந்தது. எனவே இதில் அதிக எண்ணிக்கையில் குடிமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டது. படையெடுப்பில் 65,000 போலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்; சுமார் 4,20,000 பேர் [[போர்க் கைதி]]களாயினர். ஜெர்மானியத் தரப்பில் சுமார் 16,000 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
 
கைப்பற்றப்பட்ட போலந்தை ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டன. படையெடுப்பில் பங்கேற்றதற்குப் பிரதியாக [[ஸ்லோவாக்கியா]] மற்றும் [[லித்துவேனியா]] அகிய நாடுகளுக்கு சில போலந்துப் பகுதிகள் வழங்கப்பட்டன. அடுத்த ஆறு ஆண்டுகள் போலந்து ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது போலிய யூதர்கள் லட்சக்கணக்கானோர் நாசிக்களால் [[பெரும் இன அழிப்பு|கொல்லப்பட்டனர்]]. ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்பே இரண்டாம் உலகப் போரின் முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 
== குறிப்புகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/929860" இருந்து மீள்விக்கப்பட்டது