"போலந்து படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

512 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|result = தெளிவான ஜெர்மானிய, சோவியத் வெற்றி. இரண்டாம் உலகப் போரின் துவக்கம்
|territory = போலந்து ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லித்துவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆக்கிவற்றுக்கிடையே பிரித்துக் கொள்ளப்பட்டது.
|combatant1 = {{flag|Nazi Germany|name=Germany}}<br />{{flagicon|Slovakia|1938}} [[லோவாக்கியா ஸ்லோவாக்கியா]]<br />
----
{{flagicon|Soviet Union|1923}} [[சோவியத் ஒன்றியம்]] <small>(17 செப்டம்பர் முதல்)</small>
 
==சண்டையின் போக்கு==
[[Image:Poland1939 GermanPlanMap.jpg|thumb|250px|படையெடுப்புக்கு முன் படைநிலைகள்]]
படையெடுப்புக்கான ஜெர்மானியத் திட்டம் [[வெள்ளைத் திட்டம்]] (''case white'', ''Fall Weiss'') என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதன் முக்கியக் கூறுகள்
*போலிய படைகளை எதிர்பாராத வண்ணம் [[போர் சாற்றல்]] நடைபெறும் முன்னரே படையெடுப்பு துவங்க வேண்டும்
 
=== ஜெர்மானியப் படையெடுப்பு ===
[[File:Poland2.jpg|right|thumb|250px|செப்டம்பர் 14 அன்று களநிலவரம்]]
செப்டம்பர் 1, 1939 அதிகாலை 4.40 மணியளவில் ஜெர்மானிய வான்படை [[லுஃப்ட்வாஃபே]] போல்ந்து நகர் வைலூனை குண்டு வீசி அழித்ததுடன் படையெடுப்பு ஆரம்பமாகியது. இதற்கு முன்னர் ஜெர்மானிய நாசபடைகளும் சிறப்புப் படைகளும் பரப்புரைக்காக, போலந்து தான் ஜெர்மனியை முதலில் தாக்கியது என்ற பிம்பத்தை உருவாக்க சில நாச வேலைகளில் ஈடுபட்டனர். மூன்று பெரும் பிரிவுகளாக ஜெர்மானியப் படைகள் போலந்துக்குள் முன்னேறத் தொடங்கின. செப்டம்பர் 3ம் தேதி பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் சாற்றின. முதல் வாரத்தில் ஜெர்மானியப் படைகள் போலியப் பாதுகாவல் நிலைகளைத் தகர்த்து விரைந்து முன்னேறின. எண்ணிக்கையிலும், உத்திகளிலும் போலிய வான்படையோடு ஒப்பிடுகையில் பெரும்பல்ம் கொண்டிருந்த லுஃப்ட்வாஃபே போலிய வான்படையை முறியடித்ததோடு இடைவிடாது போலந்து நகரங்களின் மீது குண்டு வீசியது. செப்டம்பர் 6ம் தேதி போலந்து அரசு வார்சாவை விட்டு வெளியேறி [[லப்லின்]] நகருக்கு இடம் பெயர்ந்தது. தங்கள் பாதுகாவல் உத்தி தோற்றதை உணர்ந்த போலந்து தளபதிகள் விஸ்துலா ஆற்றுக்குக் கிழக்கே பின்வாங்க முடிவு செய்தனர். ஆனால் செப்டம்பர் 19ம் தேதி வாக்கில் போலந்துப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியர்களால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது.
 
===சோவியத் படையெடுப்பு===
[[File:Poland1939 after 14 Sep.jpg|right|thumb|250px|சோவியத் படையெடுப்பின் போது கள நிலவரம்]]
{{main|சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு}}
மோலட்டோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் படி செப்டம்பர் 17ம் தேதி சோவியத் ஒன்றியம் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கியது. ஜெர்மானியத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிக் கொண்டிருந்த போலந்துப் படைகளை இந்த இரண்டாம் முனைத் தாக்குதல் முற்றிலுமாக நிலை குலையச் செய்தது. அடுத்த சில நாட்களில் போலந்துப் படைப்பிரிவுகளும் நகரங்களும் ஒவ்வொன்றாக சோவியத் மற்றும் ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்தன. ஆங்காங்கே எதிர்த்துப் போரிட்ட போலந்துப் பாதுகாவல் நிலைகளும் விரைவில் கைப்பற்றப்பட்டன. செப்டம்பர் 28ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறி வந்த சோவியத் படைகள் மேற்கிலிருந்து முன்னேறி வந்த ஜெர்மானியப் படைகளை விஸ்துலா ஆற்றினருகே சந்தித்தன. அதே நாள் வார்சா நகரம் சரணடைந்தது. ஆங்காங்கே எஞ்சியிருந்த போலந்துப் படைகள் அக்டோபர் 6ம் தேதிக்குள் முறியடிக்கப்பட்டு போலந்து படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
 
== விளைவுகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/929893" இருந்து மீள்விக்கப்பட்டது