"போலந்து படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
மோலட்டோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் படி செப்டம்பர் 17ம் தேதி சோவியத் ஒன்றியம் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கியது. ஜெர்மானியத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிக் கொண்டிருந்த போலந்துப் படைகளை இந்த இரண்டாம் முனைத் தாக்குதல் முற்றிலுமாக நிலை குலையச் செய்தது. அடுத்த சில நாட்களில் போலந்துப் படைப்பிரிவுகளும் நகரங்களும் ஒவ்வொன்றாக சோவியத் மற்றும் ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்தன. ஆங்காங்கே எதிர்த்துப் போரிட்ட போலந்துப் பாதுகாவல் நிலைகளும் விரைவில் கைப்பற்றப்பட்டன. செப்டம்பர் 28ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறி வந்த சோவியத் படைகள் மேற்கிலிருந்து முன்னேறி வந்த ஜெர்மானியப் படைகளை விஸ்துலா ஆற்றினருகே சந்தித்தன. அதே நாள் வார்சா நகரம் சரணடைந்தது. ஆங்காங்கே எஞ்சியிருந்த போலந்துப் படைகள் அக்டோபர் 6ம் தேதிக்குள் முறியடிக்கப்பட்டு போலந்து படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
 
== விளைவுகள் ==
[[File:Warsaw1939parade.jpg|right|thumb|250px|அக்டோபர் 6, 1939, வார்சாவில் நடைபெற்ற ஜெர்மானிய வெற்றி அணிவகுப்பில் இட்லர்]]
ஒரே மாதத்தில் போலந்து வீழ்ந்ததும், சோவியத் ஒன்றியம் நாசி ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்ததும் மேற்கத்திய நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. போலந்தால சில மாதங்கள் தாக்குப்பிடிக்க இயலும் என்று நம்பியிருந்த நேச நாட்டுப் படைகள் போலந்துக்கு உறுதியளித்திருந்த படி ஜெர்மனியின் மேற்கு எல்லையில் தாக்கத் தயாராக இல்லை. அதற்கான மன உறுதியும் அந்நாடுகளின் அரசுகள் கொண்டிருக்கவில்லை. ஜெர்மனியின் போலந்துத் தாக்குதல் துவங்கியவுடன் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கெல்லையில் [[சார் படையெடுப்பு|சார்லாந்தைத் தாக்கினாலும்]] அதனைப் பாதியிலேயே கைவிட்டு விட்டன. நேச நாடுகளின் இந்த மந்த நிலைப்பாடு ஜெர்மனிக்கு தைரியமூட்டியதுடன் பிரிட்டனையும் பிரான்சையும் எளிதில் வென்று விடலாம் என்று நம்பிக்கையும் அளித்தது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/929903" இருந்து மீள்விக்கப்பட்டது