முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய இடுகை
 
சி திருத்தம்
வரிசை 20:
==பிறப்பு==
 
திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் [[உரோமை|உரோமையில்]] பிறந்தவர் என்றாலும், அவருடைய பூர்விகம் கிரேக்க நாடு என்று கருதப்படுகிறது. அவர் முதலில் [[முதலாம் லூசியஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை லூசியசின்]] கீழ் உயர்திருத்தொண்டராக (''Archdeacon'') பணியாற்றினார். பின்னர் 254இல் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை முதலாம் லூசியஸ் நாடுகடத்தப்பட்டு இறப்பதற்கு முன் உரோமைத் திருச்சபையை இவரிடம் ஒப்படைத்தார். என்று "திருத்தந்தையர் நூல்" (''Liber Pontificalis'') தரும் செய்திக்குத் தகுந்த வரலாற்று அடிப்படை இல்லை என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
==திருமுழுக்கு அளிப்பது பற்றிய பிரச்சினை==
 
[[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆசியா|சிறு ஆசியா]] பகுதிகளில் ஒரு பிரச்சினை எழுந்தது. அதாவது, [[கிறித்தவம்|கிறித்தவ]] நம்பிக்கையை முழுமையாக ஏற்காமல் தப்பறைக் கொள்கைகளைத் தழுவியவர்கள் [[திருமுழுக்கு]] அளிக்கலாமா என்னும் சர்ச்சை கிளம்பியது. அத்தகையோர் [[திருமுழுக்கு]] அளித்தால் அதனால் பயனில்லை என்றும், அவ்வாறு திருமுழுக்கு பெற்றவர்களுக்கு மீண்டும் முறையான விதத்தில் திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்றும் சிலர் வாதாடினர். வட ஆப்பிரிக்க கார்த்தேஜ் நகர் ஆயராக இருந்த இறையியல் வல்லுநரான சிப்பிரியான் (இறப்பு: 258) இக்கருத்தை ஆதரித்தார்.
 
ஆனால் திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் ஆயர் சிப்பிரியானின் கருத்தை ஏற்கவில்லை. இதனால் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. சில ஆயர்கள் சிப்பிரியானின் கருத்துக்கும் வேறு சிலர் ஸ்தேவானின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
வரிசை 32:
==கிறித்தவத்தை மறுதலித்தோரை மீண்டும் ஏற்பது பற்றிய சர்ச்சை==
 
[[உரோமை]] மன்னன் டேசியஸ் கிறித்தவர்களைத் துன்புறுத்திய ஆண்டுகளில் (கிபி 250-251) பல கிறித்தவர்கள் உயிர்தப்புவதற்காகத் தம் சமய நம்பிக்கையைக் கைவிட்டு உரோமை தெய்வங்களுக்குப் பலிசெலுத்தினர். இவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கலாமா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. அது திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் காலத்திலும் தொடர்ந்தது.
 
==உரோமை ஆயரின் ஆட்சிப்பீடம் முதன்மை பெறுதல்==
வரிசை 40:
{{cquote|எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா}}
 
என்று சீமோன் பேதுருவை நோக்கி இயேசு கூறிய சொற்கள் (காண்க: [[மத்தேயு]] 16:18) பேதுருவின் வாரிசாக வருகின்ற உரோமை ஆயருக்கும் பொருந்தும் .என்று ஸ்தேவான் கூறினார்.
 
==திருத்தந்தை ஸ்தேவானின் இறப்பு==
வரிசை 60:
 
{{s-start}}
{{s-bef|before=[[முதலாம் லூசியுஸ்லூசியஸ் (திருத்தந்தை)|முதலாம் லூசியுஸ்லூசியஸ்]]}}
{{s-ttl|title=[[உரோமை ஆயர்]] <br/>[[திருத்தந்தை]]|years=254–257}}
{{s-aft|after=[[இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)|இரண்டாம் சிக்ஸ்துஸ்]]}}
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஸ்தேவான்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது