ஊனுண்ணித் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
{{main|நீர் சுழல் தாவரம்}}
நீர் சுழல் தாவரம் (Aldrovanda) திரோசிராசீயீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஆல்டிரோவான்டா என்ற பேரினத்தில் அடங்கும் ஒரு பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். ஆல்டிரோவான்டா பேரினத்தில் அடங்கும் தாவரவகையில் நீர்சுழல் தாவரம் மட்டுமே உள்ளது.
 
==பனிப்பூண்டு==
{{main|பனிப்பூண்டு}}
பனிப்பூண்டு அல்லது துரோசீரா (Sun dew) எனப்படுவது துரொசீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரம். தாவர இலைகளில் இருந்து நார் போன்ற அமைப்புகள் மேல் நோக்கி வளரும். இத்தாவரங்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்புகள் பனித்துளி போல பிரகாசிக்கும். இச்சுரப்பு மணம்,நிறம் என்பன அற்றதாக பூவின் அமுதம் போல காட்சியளிக்கும்.இதனால் கவரப்படும் பூச்சிகள் இச்சுரப்பில் ஒட்டிக்கொள்ளும். இச்சுரப்பிலுள்ள சமிபாட்டு நொதியங்கள் இறந்த பூச்சியை சமிபாடடையச் செய்யும். துரோசீரா பேரினத்தில் ஏறக்குறைய 194 இனங்கள் காணப்படுகின்றன.[1]
 
[[பகுப்பு:தாவரவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணித்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது