விவிலியத் திருமுறை நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
யூதர்களின் [[எபிரேய மொழி|எபிரேய]] விவிலியத்தின் 39 நூல்களும் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] '''திருமுறை நூல்கள்''' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இறைஏவுதல் பற்றி எந்த [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சபையும் பொதுவாக சந்தேகம் கொள்வதில்லை. இவற்றில் திருச்சட்ட நூல்கள், வரலாற்று நூல்கள், இறைவாக்கு நூல்கள் மற்றும் ஞான நூல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 
இவற்றைத் தவிர்த்து, சில பாரம்பரிய திருச்சபையினரால் மட்டும் ஏற்கப்படும் கிரேக்க மரபில் தோன்றிய சில பழைய ஏற்பாட்டு நூல்கள், [[இணைத் திருமுறை நூல்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. [[கத்தோலிக்க திருச்சபை]]யைப் பொறுத்தவரை ஏழு கிரேக்க மரபு நூல்களும், இரண்டு எபிரேய மரபு நூல்களின் கிரேக்க இணைப்பு பகுதிகளும் இணைத் திருமுறையாக கருதப்படுகின்றன.
 
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டை]]ப் பொறுத்த அளவில், தொடக்க காலம் முதலே கத்தோலிக்க திருச்சபையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள 27 நூல்களும் பொதுவாக அனைத்து சபையினராலும் '''திருமுறை நூல்களாக''' ஏற்கப்படுகின்றன. இவற்றில் நற்செய்தி நூல்கள், தொடக்க திருச்சபையின் வரலாறு, கிறிஸ்தவ நம்பிக்கை பற்றிய திருமுகங்கள் மற்றும் திருவெளிப்பாடு நூல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/விவிலியத்_திருமுறை_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது