முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
ஒரு முக்கோணத்தைச் சீராக விரிவடையச் செய்வதன்மூலம் மற்றைய முக்கோணத்தைப் பெறமுடியுமெனில், அவ்விரு முக்கோணங்களும் ''ஒத்த முக்கோணங்கள்'' எனக் கூறப்படுகின்றன. இதில் அம் முக்கோணங்களின் பக்கங்கள் [[விகிதசமன்|விகிதசமனானவை]]. முக்கோணமொன்றின் நீளமான பக்கம், ஒத்த முக்கோணமொன்றின் நீளமானபக்கத்தின் இரண்டுமடங்காயின், முதல் முக்கோணத்தின் சிறிய பக்கமும், மற்ற முக்கோணத்தின் சிறியபக்கத்தின் இரண்டுமடங்காக இருக்கும். மூன்றாவது பக்கமும் அவ்வாறே மற்றதன் இரண்டுமடங்காகக் காணப்படும். அத்துடன் முதல் முக்கோணத்தின் ஏதாவது இரண்டு பக்கங்களுக்கிடையேயான விகிதம், இரண்டாவது முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்கிடையேயான விகிதத்துக்குச் சமனாகும். இரண்டு முக்கோணங்களின் ஒத்த கோணங்கள் ஒன்றுக்கொன்று சமனாக இருப்பின் மட்டுமே அவ்விரு முக்கோணங்களும் ஒத்தவையாக இருக்கும்.
 
செங்கோண முக்கோணங்களையும், ஒத்தமுக்கோணங்கள் பற்றிய எண்ணக்கருவையும் பயன்படுத்தி, [[சைன் (முக்கோணவியல்)|சைன்]], [[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]] போன்ற திரிகோணகணித functionsசார்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
 
A, B, C என்பவற்றை [[உச்சி (வடிவவியல்)|உச்சிகளாகவும்]], α, β, γ என்பவற்றைக் கோணங்களாகவும், a, b, c களைப் பக்கங்களாகவும் கொண்ட முக்கோணத்தில், பக்கம் a கோணம் α வுக்கும், உச்சி A க்கும் எதிரேயுள்ளது. இதே போலவே ஏனைய பக்கங்களுமாகும். எனின்,
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது