"பொதியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==பொதுவான ஊர்ச்சாவடி==
:பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர். <ref>இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307</ref>
:வயது முதிர்ந்தவர்கள் இங்கு அமர்ந்துகொண்டு வல் என்னும் சூது விளையாடுவர். இந்த விளையாட்டுக்கு நாய் என்னும் கல்லுக்காய் பயன்படுத்தப்படும். <ref>கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூதாளர் நாய் இடம் குழித்த வல் விளையாட்டு - புறநானூறு 52</ref> <ref>பொதியிலில் இருந்துகொண்டு நரைமூதாளர் வல் என்னும் சூதாட்டம் ஆடுவர் - அகநானூறு 377</ref> இதனை வல்லநாய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் லகர-ஈறு</ref>
:ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும். <ref>சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் - அகநானூறு 167</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/936793" இருந்து மீள்விக்கப்பட்டது