தி. வை. சதாசிவ பண்டாரத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''தி. வை. சதாசிவ பண்டாரத்தார்''' (1892 - 1960) ஒரு தமிழ் வரலாற்றாளர். [[கும்பகோணம்]] அருகே திருப்புறம்பியத்தில் பிறந்த இவர் வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளையிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலவலகத்திலும் கும்பகோணம் உயர்நிலைப்பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வனத்துறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942 முதல் அவர் இறக்கும் வரை [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] வரலாற்றுத் துறையில் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._வை._சதாசிவ_பண்டாரத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது