இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==கடவுளின் ஆட்சி==
கடவுளின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள், [[ஆபிரகாம்|ஆபிரகாமிய]] சமயங்களான [[யூதம்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவம்]] ஆகியவற்றின் மறைநூல்களில் காணப்படுகின்றன. [[யூதர்]]களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர்; அவர் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் வரை, [[இசுரவேலர்|இஸ்ரயேலர்]] கடவுளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். பிற இனத்தாரின் வழக்கத்தைக் கண்டு, தங்களுக்கும் ஒரு அரசர் வேண்டுமென்று அவர்கள் விரும்பியபோது, இறைவாக்கினர் [[சாமுவேல் (இறைவாக்கினர்)|சாமுவேல்]] வழியாக [[சவுல் அரசர்|சவுலை]] இஸ்ரயேலின் முதல் அரசராக அருட்பொழிவு செய்தார். ஆனால் இஸ்ரயேலர் கடவுளின் உடன்படிக்கையை மீறி செயல்பட்டதால், அவர்களின் அரசுகள் வீழ்ச்சியை சந்தித்தன. எனவே, மக்கள் மீண்டும் கடவுளின் அரசை எதிர்பார்த்து காத்திருந்தனர். வரவிருக்கும் கடவுளின் அரசை இஸ்ரயேலின் [[இறைவாக்கினர்]] முன்னறிவித்தனர்.
 
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடவுள் தமது அரசை உலகெங்கும் நிறுவ தனது ஒரே [[மகனாகிய கடவுள்|மகனை]] உலகிற்கு அனுப்பினார்.<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 13:31-33''' "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது"</ref> [[தந்தையாம் கடவுள்|தந்தை கடவுளின்]] மகனாகிய இயேசு இந்த உலகிற்கு வந்து, இஸ்ரயேல் மக்களின் நடுவில் இறையாட்சியின் மதிப்பீடுகளை கற்பித்தார். தனது [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்]]களின் வழியாக இறையரசின் இயக்கமாக [[திருச்சபை]]யை நிறுவினார். அவர் மீண்டும் வருமளவும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றி இறையரசைக் கட்டியெழுப்புவது திருச்சபையின் பணியாகும். உலகின் முடிவில் அரச மகிமையில் இயேசு திரும்பி வந்து, தனது அரசைத் தந்தையாம் கடவுளிடம் ஒப்படைப்பார். அப்போது புதிய [[விண்ணகம்|விண்ணகமும்]], புதிய மண்ணகமும் தோன்றும்;<ref>'''[[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாடு]] 21:1''' "நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன."</ref> கடவுள் மனிதரிடையே தங்கி ஆட்சி செய்வார்.<ref>'''[[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாடு]] 21:3''' "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்."</ref>
"https://ta.wikipedia.org/wiki/இறையரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது