இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
லூக்கா பக்கவழி நெறிப்படுத்தல்
சிNo edit summary
வரிசை 9:
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய [[விவிலியம்|விவிலிய]] குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: [[யோவான்|யோவான் 19:30-31]]; [[மாற்கு|மாற்கு 16:1; 16:6]]. இயேசு இறந்து [[கல்லறை]]யில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் ([[மத்தேயு|மத்தேயு 28:1-7]]; [[மாற்கு|மாற்கு 16:1-8]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 24:1-12]]; [[யோவான்|யோவான் 20:1-12]]). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் ([[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 1:3]]); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் [[உயிர்த்தெழுதல் பெருவிழா]] (''Easter''), [[விண்ணேற்றப் பெருவிழா]] (''Ascension Day'') என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய தொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed) ==
 
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக [[புனித பவுல்]] [[1 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு]] எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது:
வரிசை 16:
இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தியைப் [[புனித பவுல்]] "பெற்றுக்கொண்டதாகக்" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கி.பி. 35 அளவிலேயே இம்மரபு எழுந்திருக்க வேண்டும். அந்த மரபைத்தான் பவுல் எடுத்தியம்புகின்றார்; கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை ஒப்படைக்கின்றார்.
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை ==
 
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலத்தீனம்|பாலத்தீன]] நாட்டில் வாழ்ந்து இறந்த [[இயேசு]] இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.
வரிசை 23:
{{cquote|நீங்கள் கிறித்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சர்ந்தவற்றையே நாடுங்கள்...பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள் ([[கொலோசையர் (நூல்)|கொலோசையர்]] 3:1,12).}}
 
==இயேசு உயிர் பெற்று எழுதல்: மத்தேயு நற்செய்தி==
 
இயேசு உயிர் பெற்று எழுந்த நிகழ்வை [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]], [[யோவான்]] ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் சில வேறுபாடுகளுடன் பதிவு செய்துள்ளனர். [[திருவழிபாட்டு ஆண்டு|கிறித்தவ வழிபாட்டு மூவாண்டு]] சுழற்சியில் 2011ஆம் ஆண்டு முதலாம் ஆண்டாக உள்ளதால் [[மத்தேயு]] நற்செய்தி பாடம் கிறித்தவ கோவில்களில் வாசிக்கப்படும். இதோ:
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது