திருவழிபாட்டு ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
==சிறப்புக் காலங்கள்==
திருவழிபாட்டு ஆண்டின் [[பொதுக் காலம்]] தவிர்த்த, திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவை சிறப்புக் காலங்கள் ஆகும்.
 
'''திருவருகைக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம் ஆகும். [[இயேசு கிறித்து|இயேசுவின்]] முதலாம் வருகையைக் கொண்டாடுவதற்கும், அவரது இரண்டாம் வருகையை எதிர்நோக்குவதற்கும் உரிய தயாரிப்பு காலமாக இது அமைந்துள்ளது. இது [[கிறிஸ்து அரசர் பெருவிழா]]வைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று தொடங்கி, [[கிறிஸ்து பிறப்பு பெருவிழா]]வுக்கு முன்தினம் அன்று முடிவடைகிறது.
 
'''கிறிஸ்து பிறப்புக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும். ஆண்டவராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[கிறிஸ்து பிறப்பு பெருவிழா]] அன்று தொடங்கி, [[ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா]]வுக்கு முன்தினம் முடிவடைகிறது.
 
'''தவக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் நான்காவது காலம் ஆகும். நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[திருநீற்றுப் புதன்]] அன்று தொடங்கி, [[ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா]]வுக்கு முன்தினம் முடிவடைகிறது.
 
'''பாஸ்கா காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா]] அன்று தொடங்கி, [[தூய ஆவியாரின் வருகை பெருவிழா]] அன்று முடிவடைகிறது.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருவழிபாட்டு_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது