"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
விவிலியத்தின் முதல் புத்தகமான [[தொடக்க நூல்]], உலகில் பாவம் நுழைந்த விதத்தை கதை வடிவில் உருவகமாக விவரிக்கிறது. தொடக்கத்தில் கடவுள் தமது உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்து, உலகில் உள்ள அனைத்தின் மீதும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.<ref>'''[[தொடக்க நூல்]] 1:26''' 'அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.'</ref> இவ்வுலகில் கடவுளுக்குரிய பராமரிப்பு பணிகளை செய்ய, மானிடருக்கு அனைத்து விதத்திலும் கடவுள் சுதந்திரம் அளித்திருந்தார். மானிடரின் சுதந்திரத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில், ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ண கடவுள் தடை விதித்தார்.<ref>'''[[தொடக்க நூல்]] 2:16-17''' 'ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டுச் சொன்னார்.'</ref> மனிதர் கடவுளைப் போன்று மாற விரும்பி,<ref>'''[[தொடக்க நூல்]] 3:5''' 'பாம்பு பெண்ணிடம், "நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்" என்றது.'</ref> கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து [[பாவம்]] செய்தனர்.<ref>'''[[தொடக்க நூல்]] 3:6''' 'பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.'</ref>
 
இக்கதை பின்வரும் கருத்தை உணர்த்துகிறது:
இக்கதை பின்வரும் கருத்தை உணர்த்துகிறது: கடவுளால் அவரது பணி செய்யப் படைக்கப்பட்ட மானிடர், உலகப் பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்தனர். மரத்தின் கனியாகிய [[சிலை வழிபாடு|சிலை வழிபாட்டு]]க்கு அடிமையாகினர். எனவே, மானிடருக்கு '''மீட்பு''' தேவைப்பட்டது. எனவே உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன.
 
இக்கதையை உண்மைச் சம்பவமாகக் கருதிய தொடக்கக்கால கிறிஸ்தவ அறிஞர்கள், பாம்பின் வடிவத்தில் வந்தது [[சாத்தான்|அலகை]]யே என்றும், அலகையின் பேச்சை நம்பியே மானிடர் ஏமாந்ததாகவும் விளக்கம் அளித்தனர். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்று கூறியதை,<ref>'''[[தொடக்க நூல்]] 3:15'''</ref> மீட்பருக்கான வாக்குறுதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இதில் பாம்பு அலகையையும், பெண் புதிய ஏவாளாகிய [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வையும், அலகையின் தலையைக் காயப்படுத்தும் பெண்ணின் வித்து [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வையும் குறித்து நிற்கின்றன.
 
==மீட்புத் திட்டம்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940353" இருந்து மீள்விக்கப்பட்டது