"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
இக்கதை பின்வரும் கருத்தை உணர்த்துகிறது:
 
:கடவுளால் அவரது பணி செய்யப் படைக்கப்பட்ட மானிடர், உலகப் பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்தனர். மரத்தின் கனியாகிய [[சிலை வழிபாடு|சிலை வழிபாட்டு]]க்கு அடிமையாகினர். எனவே, மானிடருக்கு '''மீட்பு''' தேவைப்பட்டது. எனவே உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன.
 
இக்கதையை உண்மைச் சம்பவமாகக் கருதிய தொடக்கக்கால கிறிஸ்தவ அறிஞர்கள், பாம்பின் வடிவத்தில் வந்தது [[சாத்தான்|அலகை]]யே என்றும், அலகையின் பேச்சை நம்பியே மானிடர் ஏமாந்ததாகவும் விளக்கம் அளித்தனர். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்று கூறியதை,<ref>'''[[தொடக்க நூல்]] 3:15'''</ref> மீட்பருக்கான வாக்குறுதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இதில் பாம்பு அலகையையும், பெண் புதிய ஏவாளாகிய [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வையும், அலகையின் தலையைக் காயப்படுத்தும் பெண்ணின் வித்து [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வையும் குறித்து நிற்கின்றன.
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940357" இருந்து மீள்விக்கப்பட்டது