"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,086 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==மீட்பராம் கடவுள்==
[[இசுரவேலர்|இஸ்ரயேலர்]] அனைவரும் [[தந்தையாம் கடவுள்|கடவுளை]]த் தங்கள் மீட்பராக கருதும் வழக்கம் கொண்டிருந்தனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து கடவுளின் ஆற்றலால் மீட்கப்பட்டு, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் மீட்பளிப்பவராகவேத் தெரிந்தார். [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] அவர்களின் சில சிந்தனைகள் பின்வருமாறு:
 
:"ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர்; கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே."<ref>'''[[2 சாமுவேல் (நூல்)|2 சாமுவேல்]] 22:2-3'''</ref>
:"ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?"<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 27:1'''</ref> "நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 37:39'''</ref>
:"இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே."<ref>'''[[எசாயா (நூல்)|எசாயா]] 12:2'''</ref> "இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; உலக முழுமைக்கும் கடவுள் என அவர் அழைக்கப்படுகின்றார்."<ref>'''[[எசாயா (நூல்)|எசாயா]] 54:5'''</ref>
:"அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்; நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்."<ref>'''[[எரேமியா (நூல்)|எரேமியா]] 50:34'''</ref>
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940384" இருந்து மீள்விக்கப்பட்டது