லாரல் மற்றும் ஹார்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
=='''ஸ்டேன் லாரல்'''==
ஸ்டேன் லாரல் (ஜூன் 16, 1890 - ஃபிப்ரவரி 23, 1965)-ன் இயற்ப்பெயர் ஆர்தர் ஸ்டேன்லி ஜெஃபர்சன். இவர் இங்கிலாந்தில், லான்கஷயர்-ல் பிறந்தார், இவரது தந்தை ஆர்தர் ஜோசஃப் திரையரங்கு சார்ந்த தொழில் முனைவோர் ஆவார் மேலும் வடக்கு இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் இருந்த திரையரங்கின் சொந்தக்காரரும் ஆவார். கலைத்துறை என்பது லாரலின் பிறப்பிலிருந்தே உடனிருந்த ரத்த சொந்தம் ஆகும். 1905-ல் ஜெஃபர்சன்-ன் குடும்பம் க்ளாஸ்கௌ-விற்கு குடிபெயர்ந்தது. இங்கிருந்த தி மெட்ரோபோல் என்கிற நாடக அரங்கத்தில் தான் லாரல் முதன் முதலாக மேடையேறினார். இதன் பின்பு லாரல் படிப்படியாக கலைத்துறையில் வேகமாக முன்னேறினார். பின்னை 1909-ல் இங்கிலாந்தில் முன்னணி நகைச்சுவை குழுவான இம்ப்ரிசாரியோ-வில் இடம்பெற்றார். பின்னர் 1912-ல் லாரல் ஃபிரெட் கார்னோ-வின் குழுவுடன் இணைந்து அமெரிக்கா முழுவதும் நாடக அரங்கேற்றம் செய்வதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கும் என்று கருதினார். 1917-ல் லாரல் மே டல்பேர்க் என்கிற நடிகையுடன் இணைந்து நாடகங்களில் நகைச்சுவைகளை நிகழ்த்தி வந்தார். ஹல்பேர்க்-உடன் இணைந்து லாரல் முதல் முதலாக 1917-ல் நட்ஸ் இன் மே என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் தான் இவர் தனது பெயரை ஸ்டேன் லாரல் என்று மாற்றிக்கொண்டார். சட்டபூர்வமாக தனது பெயரை 1931-ல் பதிவுசெய்து கொண்டார். டல்பேர்க் தான் லாரல்-ன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் இதுவே இவர் லாரல் நடிக்கும் பெரும்பாலான படங்களில் பங்குவகிக்க தூண்டியது. பின்னாளில் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரிடையே விரிசல் ஏற்பட்டது. இதனூடே ஜோ ராக் என்கிற திரைப்பட தயாரிப்பாளரின் தலையீட்டின் மூலம் டல்பேர்க் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். 1925-ல் லாரல் ஹால் ரோச் நிறுவனத்தில் இயக்குனர் மற்றும் எழுத்தாளராக இணைந்தார். மேலும் 1925 மற்றும் 1926 ஆகிய இடைப்பட்ட காலங்களில் இவர் 22 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஹார்டியுடன் இணை சேர்வதற்கு முன்பு லாரல் 50-ற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
 
=='''ஆலிவர் ஹார்டி'''==
ஆலிவர் ஹார்டி (ஜனவரி 18, 1892 - ஆகஸ்ட் 7,1957)-ன் இயற்பெயர் நார்வெல் ஹார்டி. இவர் ஜார்ஜியாவில் பிறந்தவர். இவர் தனது தந்தையாரின் பெயரின் முதல் பாதியை தனது பெயரோடு இணைத்துக்கொண்டு தனது பெயரை '''ஆலிவர் நார்வெல் ஹார்டி''' என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு நெருக்கமானவர்களால் '''ஆலி''' மற்றும் '''பேப்''' என்றும் அழைக்கப்பட்டார். '''பேப்''' என்கிற இவரது பட்டப்பெயரானது இத்தாலியின் லூபின் ஸ்டுடியோவிற்கு அருகிலுள்ள நாவிதர் ஒருவரிடம் இருந்து கிடைக்கபெற்றதாகும். ஹார்டி தனது ஆரம்ப காலங்களில் '''பேப் ஹார்டி''' என்றே அழைக்கப்பெற்றார். இவரது பதின்ம வயதின் பிற்பகுதிகளில் இவர் ஒரு மேடைப்பாடகராகவும் வெற்றியை ஈட்டினார். ஜியார்ஜியாவின் மில்எட்ஜ்வில்-லில் ஒரு திரையரங்கையும் நடத்தினார். இதன் ஒருபகுதி பங்குதாரராக இவரது தாயார் இருந்தார். இங்கு திரைப்படங்களை பார்த்து பார்த்தே இவர் தனது ஆர்வ மிகுதியில் நடிகராக வளர்ந்தார். பின்னர் 1913-ல் லூபின் இயங்குபட நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். முதலில் இவர் ஸ்டுடியோகளில் சிறு சிறு எடுபிடி வேலைகள் முதற்கொண்டு செய்து படிப்படியாகவே முன்னேறினார் அந்த நேரங்களில் தான் வசன நடை மற்றும் ஒத்தாசை செய்து கற்றுகொண்டார். 1914-ல் இவர் மெடெலின் சலோசைன் என்பவரை மணந்துகொண்டார். ஹார்டி முதன் முதலாக '''அவுட் விட்டிங் டாட்''' என்கிற திரைப்படத்தில் பேப் கதாபத்திரத்தில் நடித்தார். பின்னர் 1914 முதல் 1916 வரையிலான காலகட்டங்களில் ஹார்டி '''விம் காமெடி கம்பெனி''' என்கிற நிறுவனத்துடன் இணைந்து 177 குறும்படங்களில் '''பேப்''' கதாபாத்திரத்தில் பணியாற்றினார். இந்த குறும்படங்கள் 1917 வரையிலும் திரையிடப்பட்டன. கதாநாயகன், எதிர்நாயகன், மற்றும் பெண்வேடம் போன்ற மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கும் திறம்படைத்திருந்ததால் இவர் அதிக நடிக்கும் வாய்ப்புகள் பெற்ற நடிகராக மாறினார். மொத்தத்தில் ஹார்டி 250-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் நியூயார்க் நகரில் இருந்து தனது மனைவியுடன் கலிஃபோர்னியா-விற்கு வாய்ப்புகளை தேடி போனார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/லாரல்_மற்றும்_ஹார்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது