"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

948 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==நிலை வாழ்வு==
'''நிலை வாழ்வு''' என்பது, மீட்பு அடைந்தோருக்கு கடவுள் வழங்கும் பரிசாகும்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 25:46''' "பாவிகள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."</ref> "உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது"<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 18:9'''</ref> என்று [[இயேசு கிறித்து|இயேசு]] குறிப்பிடுகிறார். உலக இன்பங்களுக்காக நிலைவாழ்வை இழந்துவிடக்கூடாது என்பதையே அவர் இவ்வாறு கூறுகிறார்.
 
இவ்வுலகில் கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காக எதையும் இழக்கத் துணியும் ஒருவர் கண்டிப்பாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வர்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 19:29''' "என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்."</ref>
 
==ஆதாரங்கள்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/941836" இருந்து மீள்விக்கப்பட்டது