விஜயபாகு படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[ஏழாவது விசயபாகு]] மன்னனின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் கிடைத்தனர். அவர்கள் முறையே, புவனேகபாகு, பரராசசிங்கன், மாயாதுன்னை ஆகியோர். மன்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் அவர் மனைவி கிரிவெல்லவுக்கு தேவராசா எனும் பிள்ளை கிடைத்தது. கிரிவெல்லவின் ஆலோசனைப் படி அவள் மகன் தேவராசாவை முடிக்குரிய இளவரசனாக்க அரசன் தீர்மானித்தான். இதனைத் தெரிந்துகொண்ட முதல் மனைவியின் பிள்ளைகள் மூவரும் அரசனுக்கு எதிராகச் செயற்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒருவனை அரச மாளிகைக்கு அனுப்பி, மன்னனை மாளிகையிலேயே கொலை செய்வித்தனர். இந்த வரலாற்று நிகழ்வே விசயபா படுகொலை என அழைக்கப்படுகிறது.
 
[[1521]] இல் ஏற்பட்ட இந்த விசயபாகு படுகொலையின் பெறுபேறாய்க் [[கோட்டை அரசு]] மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இளைய மகன் மாயாதுன்னவே இந்நிகழ்வின் முதன்மையானவனாகச் செயற்பட்டான். கோட்டை அரசின் மன்னனாக வேண்டும் என இவனே அதிகம் கனவு கண்டான். இவனில் சந்தேகம் கொண்ட அண்ணன் புவனேகபாகு, மாயாதுன்னையைக் கொலை செய்யப் போர்த்துக்கேயரின் உதவியை நாடினான். இதனாலும் மேலும் குழப்பங்கள் வெடிக்கலாயின. [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரும்]] இலங்கையில் ஆதிக்கம் செலுத்த இந்நிகழ்வு மூல காரணியாக அமைந்தது.
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/விஜயபாகு_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது