மால்கம் ரஞ்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: nl:Malcolm Ranjith; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர்
| type = Cardinal
| honorific-prefix = <small>மேதகு</small> <br />
| name = ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன்
| honorific-suffix =
வரிசை 39:
| religion = [[கத்தோலிக்கம்]]
| residence = [[கொழும்பு]], [[இலங்கை]]
| parents = வில்லியம் டொன்,<br /> மேரி வினிஃப்ரீடா
| spouse =
| children =
வரிசை 45:
| profession =
| alma_mater =
| motto = இலத்தீன்: Verbum caro factum est<br /> (வாக்கு மனிதர் ஆனார்)
<!---------- மற்றவை ---------->
| other =
வரிசை 53:
இவர் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங்கையின் முதல் கர்தினாலாக இருந்தவர் தோமாஸ் கூரே (கர்தினால்: 1965-1988).<ref>[http://en.wikipedia.org/wiki/Thomas_Cooray கர்தினால் தோமாஸ் கூரே]</ref>
 
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
 
மால்கம் ரஞ்சித் இலங்கையில் [[பொல்காவலை]] பகுதியில் [[குருநாகலை|குருநாகலையில்]] 1947ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் டொன் வில்லியம் என்பவருக்கும் மேரி வினிஃப்ரீடா என்பவருக்கும் ஒரே மகனாகப் பிறந்தார்.
வரிசை 65:
விவிலியப் படிப்பில் தேர்ச்சிபெறுவதற்காக மால்கம் ரஞ்சித் உரோமை திருத்தந்தை விவிலியப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1978இல் மேல்நிலைப் பட்டம் பெற்றார்.
 
== தொடக்க காலப் பணிகள் ==
 
உரோமையில் படிப்பை முடித்தபின் இலங்கை திரும்பிய மால்கம் ரஞ்சித் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பங்குகளில் மறைப்பணி ஆற்றினார். 1983இல் மறைபரப்பு நிறுவனங்களின் தேசிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
 
== ஆயராக நியமனம் ==
 
1991, சூன் மாதம் 17ஆம் நாள் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் பெற்று, அதே ஆண்டு ஆகத்து 31ஆம் நாள் திருப்பொழிவு பெற்றார். திருப்பொழிவு நிகழ்த்தியவர் அப்போது கொழும்பு பேராயராக இருந்த நிக்கோலாஸ் மாற்கஸ் பெர்னாண்டோ ஆவார். அவருக்குத் துணையாக நின்று ஆயர் தோமாஸ் சவுந்தரநாயகமும் ஒசுவல்ட் கோமிசும் திருப்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 
== இரத்தினபுரி முதல் ஆயர் ==
 
புதிதாக ஏற்படுத்தப்பட்ட இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மால்கம் ரஞ்சித் 1995 நவம்பர் 2ஆம் நாள் பொறுப்பேற்றார்.
 
== உரோமை மறைபரப்பு பேராயத்தில் பதவி ==
 
1995-2001 காலக்கட்டத்தில் இரத்தினபுரி ஆயராகப் பணிபுரிந்தபின், 2001 அக்டோபர் முதல் நாள் உரோமை மறைபரப்பு பேராயத்தில் துணைச்செயலராக நியமனம் பெற்றார்.
 
== திருத்தந்தையின் தூதுவர் ==
 
2004 ஏப்பிரல் 29இலிருந்து டிசம்பர் 2005 வரை இந்தோனேசியா, கிழக்கு தீமோர் நாடுகளில் திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் பேராயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
 
== திருவழிபாட்டுப் பேராயச் செயலர் ==
 
மால்கம் ரஞ்சித் உரோமை திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் நெறிமுறைக்கான பேராயத்தின் செயலராக 2005 டிசம்பர் 10ஆம் நாள் நியமனம் பெற்றார். அங்கு அவருடைய நான்கு ஆண்டுப் பணிக்காலத்தின்போது, மால்கம் ரஞ்சித் கத்தோலிக்க வழிபாடு பண்டைக்கால மரபுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றும், புதிய அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
== கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் ==
 
2009ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] மால்கம் ரஞ்சித்தை கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு சூன் 29ஆம் நாள் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] கைகளிலிருந்து பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய "கம்பளித் தோள்பட்டை" (''Pallium'') பெற்றார்.
வரிசை 95:
கொழும்பு உயர்மறைமாவட்டப் பொறுப்பை 2009, ஆகத்து 5ஆம் நாள் ஏற்றுக்கொண்டார்.
 
== இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ==
 
பேராயர் மால்கம் ரஞ்சித் 2010 ஏப்ரல் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== கர்தினால் பதவி ==
 
2010, அக்டோபர் 20ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] 24 புதிய கர்தினால்களை நியமிக்கப்போவதாக அறிவித்தார். அவர்களுள் ஒருவர் பேராயர் மால்கம் ரஞ்சித். அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] புதிய கர்தினால்களை உரோமை [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] நிகழ்ந்த கர்தினால் குழுக் கூட்டத்தின்போது நியமித்து, வழக்கம்போல அவர்களுக்குப் பதவிச் சின்னங்களாகிய சிவப்புநிற மண்டையொட்டுத் தொப்பியும் (''skull cap''), நான்முகத் தொப்பியும் (''biretta'') அளித்தார்.
வரிசை 107:
அதன் பிறகு, 22 ஆண்டுகள் தாண்டிய பின்னரே இலங்கையிலிருந்து இரண்டாம் கர்தினாலாக மால்கம் ரஞ்சித் பதவி உயர்வு பெற்றார்.
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள்]]
வரி 119 ⟶ 118:
[[it:Albert Malcolm Ranjith Patabendige Don]]
[[la:Albertus Milcolumbus Ranjith]]
[[nl:Albert Malcolm Ranjith Patabendige Don]]
[[pl:Malcolm Ranjith]]
[[pt:Albert Malcolm Ranjith Patabendige Don]]
"https://ta.wikipedia.org/wiki/மால்கம்_ரஞ்சித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது