திருவழிபாட்டு ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
தவக் காலத்தில் மனமாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள், பாஸ்கா காலத்தில் இயேசுவின் உயிர்ப்பின் மாட்சியைக் கொண்டாடி, கடவுளோடு ஒப்புரவாகின்றனர். எனவே, இது ''ஒப்புரவின் காலம்'' ஆகும்.
 
'''தவக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் நான்காவது காலம் ஆகும். நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[திருநீற்றுப் புதன்]] அன்று தொடங்கி, [[உயிர்த்த ஞாயிறு|ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா]]வுக்கு முன்தினம் முடிவடைகிறது. இக்காலத்தின் புனித வாரத்தில் வரும் [[பெரிய வியாழன்]], [[புனித வெள்ளி]], [[புனித சனி]] ஆகிய மூன்று நாட்களும் ''பாஸ்கா முந்நாட்கள் (Paschal Triduum)'' என்று அழைக்கப்படுகின்றன.
 
'''பாஸ்கா காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[உயிர்த்த ஞாயிறு|ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா]] அன்று தொடங்கி, [[தூய ஆவியாரின் வருகை பெருவிழா]] அன்று முடிவடைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருவழிபாட்டு_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது