"இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
காங்கிரஸ் பேரியக்கத்தால் நடத்தப்பட்ட இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் நேரடியாகப் பங்கு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும் இயக்க நடவடிக்கைகளை வெகு உன்னிப்பாகக் கவனித்து அப்பேரியக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி தங்களது கணவன்மார்களுக்கு உறுதுணையாக விளங்கி பல இன்னல்கள் அனுபவித்து பட்டிணியால் வாடியதாக சான்றுகள் பல உள்ளன.
 
[[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கியும் உதவியுள்ளனர். 6 சுதேசி கப்பல் நிறுவனம் "காலியா" "லாவோ" என்னும் பெயருடைய இரு கப்பல்களை வாங்கியது. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே "வந்தேமாதரம்" எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன 'காலியா' 'லாவோ' கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி 'வீர சிதம்பரம் வாழ்க' எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி பெண்களும் இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.7 திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சிதம்பனாரையும், சுப்புரமணியசிவாவையும், போலீஸ் படையினர் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். தம்மைக் கண்டு விம்மியழுத மனைவியைப் பார்த்து "மீனாட்சி பயப்படாதே! விரைவில் வந்து விடுகிறேன்"’ என்று 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிதம்பரனார் ஆறுதல் கூறினார்.
 
சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்வச் சீமானின் மனைவியான மீனாட்சியம்மாள், தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும் தன் கணவரின் மேல் அன்பு கொண்ட பலர் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்தும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.
தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது. வத்தலக்குண்டில் பிறந்தவரான சுப்பிரமணிய சிவா தமக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி மீனாட்சியம்மாளைத் துறந்து ஈன்று வளர்த்த அன்னையையும் மறந்து தேச விடுதலைப் போரில் அயராது ஈடுபட்ட அப்பழுக்கற்றவர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அந்நாளில் சிறைகளிலே தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இரவு நேரங்களில் படிக்கவும், எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலில் கடுமையான உழைப்பு. இச்சூழ்நிலையில் பட்டினியால் அவதிப்பட்டு கொண்டிருந்த தன் மனைவி மீனாட்சியின் துயர் துடைக்க "சச்சிதானந்த சிவம்"’ என்ற அரிய வேதாந்த நூலை, தமது சிறை வாசத்தின்போது இயற்றினார். அந்நூலை அவர் இயற்ற காரணமாக இருந்த மிகவும் பரிதாபகரமான அந்த நிகழ்ச்சியை அவரே அந்த நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.
 
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர் என்பவர் வுhந டிநயரவகைரட என்ற சேஷத்திரத்தின் வாயிலிற் செல்லுங்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும் இல்லாத ஒரு பிறவி நொண்டி அவரைக் கண்டு பிச்சை கேட்க அவர் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று அவன் கையைப் பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல வளர அவன் பரம சந்தோஷமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று கிருஸ்துவ வேத புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அதே மாதிரியாக எனது மனைவி என்னைச் சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில், தான் ஏழ்மைத் தனத்தினால் மிகக் கஷ்டப்படுவதால் தனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள நானும் ‘’ளுடைஎநச"ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று கூறி எனது சற்குருமுகத்தினின்றும் கேட்டு, அறிந்து அனுபவித்தவைகளை ஒரு புத்தக ரூபமாய் எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன்’’ என்று 1911-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாள் சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார். அப் புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.
 
==திருநெல்வேலி சதி வழக்கு==
== சுயஆட்சி இயக்கம்==
 
சமூக கட்டுப்பாட்டிற்குள்ளாகி அடைப்பட்டுக் கிடந்த தமிழக மகளிரை அரசியலில் ஈர்த்தது அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து அம்மையாரால் காங்கிரஸின் ஆதரவோடு 1916-இல் சென்னையில் தொடங்கப்பட்ட சுயஆட்சி இயக்கமாகும். ஆங்கில அரசை எதிர்த்து இந்தியா சுய ஆட்சி பெறவேண்டுமென்று போர்க்கொடி தூக்கியமையால் இவர் சிறை வைக்கப்பட்டார். இவ்வம்மையாரின் கைது ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட இப்போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்து படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார்15வந்தார்.15 அம்மையார் கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் செம்டம்பர் 14-ஆம் நாள் பொதுக் கூட்டம் கூட்டினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அம்மையார் விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.16 இதுவே நீண்ட நாள் அமைதிக்குப்பிறகு தமிழகப் பெண்டிர் அரசியலில் அடிவைத்த சம்பவமாகும். இவரின் சேவையை பாராட்டி 1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற 32-வது காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது உரையின் முடிவில் பின்வருமாறு கூறினார்.
: "சகோதர சகோதரிகளே உங்கள் வாய்கள்
:: இந்திய விடுதலை பற்றியே பேசட்டும்
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/946257" இருந்து மீள்விக்கப்பட்டது