ஆயர் (கிறித்துவ பட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் - உள்தலைப்புகள் மாற்றப்பட்டன
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
"ஆயர்" என்றால் "(ஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள். அது கிறித்தவ சபையின் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள்தரும்.
 
==கத்தோலிக்க திருச்சபை "ஆயர்" என்னும் சொல்லைப் பயன்படுத்தல்திருச்சபையில்==
 
கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஒரு [[மறைமாவட்டம்|மறைமாவட்டத்தின்]] தலைவர் '''ஆயர்''' என்று அழைக்கப்படுகிறார். [[கத்தோலிக்க திருச்சபை]]யின் வழக்கப்படி "ஆயர்" என்னும் பொறுப்பைப் பெறுபவர் திருச்சபையின் உயர்முதல் தலைவராகிய [[திருத்தந்தை|திருத்தந்தையால்]] நியமிக்கப்படுவார். அவருடைய அதிகாரத்தின்படி ஆயர்நிலை அருட்பொழிவு பெறுவார். முன்னாள்களில் "ஆயர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "மேற்றிராணியார்" என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது. அச்சொல் "மேல்+திராணி" என்னும் மூலத்திலிருந்து பிறந்து "மேல் பொறுப்பு" கொண்டவர் என்னும் பொருள் தந்தது. கிரேக்க மூலத்துக்கு ஏற்ப "கண்காணிப்பாளர்" என்னும் பொருளும் அதில் அடங்கியிருந்தது.
வரிசை 16:
உலகத் திருச்சபையின் தலைவரும், [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]]வின் வழித்தோன்றலுமான [[உரோமை நகரம்|உரோமை மறைமாவட்டத்தின்]] ஆயர் [[திருத்தந்தை]] என்று அழைக்கப்படுகிறார்.
==தென்னிந்திய திருச்சபை "ஆயர்" எனக் குறிப்பிடுவதுதிருச்சபையில்==
 
சீர்திருத்த சபைகளில், குறிப்பாகத் தென்னிந்திய திருச்சபையில் bishop என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக "பேராயர்" என்பது பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆயர்_(கிறித்துவ_பட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது