ஆயர் (கிறித்துவ பட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
 
[[கத்தோலிக்க திருச்சபை]]யைப் பொறுத்தவரை, ஒரு [[மறைமாவட்டம்|மறைமாவட்டத்தின்]] தலைவர் '''ஆயர்''' என்று அழைக்கப்படுகிறார். சிறப்பாக உலகத் திருச்சபையின் தலைவரும், [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]]வின் வழித்தோன்றலுமான [[உரோமை நகரம்|உரோமை மறைமாவட்டத்தின்]] ஆயர் [[திருத்தந்தை]] என்று அழைக்கப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி, '''உரோமை ஆயர்''' மட்டும் [[கர்தினால்]] குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்; மற்ற மறைமாவட்டங்களில், "ஆயர்" என்னும் பொறுப்பைப் பெறுபவர் திருச்சபையின் உயர்முதல் தலைவராகிய [[திருத்தந்தை|திருத்தந்தையால்]] நியமிக்கப்படுகிறார். ஒரு ஆயர் அவருடைய அதிகாரத்தின்படி ஆயர்நிலை அருட்பொழிவு பெறுவார். முன்னாள்களில் "ஆயர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "மேற்றிராணியார்" என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது. அச்சொல் "மேல்+திராணி" என்னும் மூலத்திலிருந்து பிறந்து "மேல் பொறுப்பு" கொண்டவர் என்னும் பொருள் தந்தது. கிரேக்க மூலத்துக்கு ஏற்ப "கண்காணிப்பாளர்" என்னும் பொருளும் அதில் அடங்கியிருந்தது.
 
===ஆயர் நிலைகள்===
கத்தோலிக்க திருச்சபையில் பேராயர், ஆயர், இணை ஆயர், துணை ஆயர் என்ற நான்கு நிலைகளில் ஆயர்கள் பணி செய்கின்றனர்.
:'''பேராயர்''': ஒரு கத்தோலிக்க [[மறைமாவட்டம்|உயர்மறைமாவட்டத்தின்]] தலைவர் "பேராயர்" (Arch-Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
:'''ஆயர்''': ஒரு கத்தோலிக்க [[மறைமாவட்டம்|மறைமாவட்டத்தின்]] தலைவர் "ஆயர்" (Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
:'''இணை ஆயர்''': ஒரு ஆயருக்கு வாரிசாகவும், துணையாகவும் நியமிக்கப்படும் ஆயர் "இணை ஆயர்" (Co-adjutor Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
:'''துணை ஆயர்''': ஒரு ஆயரின் மேய்ப்பு பணியில் உதவுவதற்கு மட்டும் நியமிக்கப்படும் ஆயர் "துணை ஆயர்" (Auxilary Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
 
==தென்னிந்திய திருச்சபையில்==
 
சீர்திருத்த சபைகளில், குறிப்பாகத் தென்னிந்திய திருச்சபையில் bishop என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக "பேராயர்" என்பது பயன்படுகிறது.
 
கத்தோலிக்க சபையில் "பேராயர்" என்பது archbishop என்னும் சொல்லுக்கு நேரிணையாகக் கொள்ளப்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயர்_(கிறித்துவ_பட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது