ரணதீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Chinnz (பேச்சு | பங்களிப்புகள்)
எழுத்துப் பிழைகள் சரி செய்யபட்டது
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''ரணதீரன்''' கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். [[அரிகேசரி|அரிகேசரியின்]] மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் [[அரியணை]] ஏறினான். கடல் போன்ற [[சேனை|சேனையினை]] உடையவன் எனப்படுகிறான்.
 
== ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும் ==
 
ரணதீரன் '''கோச்சடையன்''' என அழைக்கப்பட்டான். '''செங்கோல் தென்னன்''', '''வானவன்''', '''செம்யன்''', '''மதுரகருநாடகன்''', '''கொங்கர்கோமான்''', '''மன்னர் மன்னன்''' போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக [[வேள்விக்குடிச் செப்பேடு]] இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் [[சேர நாடு|சேர நாட்டை]] வென்றான். பின்னர் [[சோழ நாடு]], [[கொங்கு நாடு]], [[கருநாடகம்]] அனைத்தினையும் வென்று அனைவரையும் [[கப்பம்]] கட்டுமாறு [[ஆணை|ஆணையிட்ட]] இவன் [[மருதூர்|மருதூரில்]] நடைபெற்ற போரில் [[பொதிய மலை|பொதிய மலைத்]] தலைவன் [[ஆய்வேள்|ஆய்வேளையும்]] [[மங்கலபுரம்|மங்கலபுரத்தில்]] [[மாரதர்|மாரதரையும்]] வெற்றி கொண்டவனாவான். [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மன்னனான [[விக்கிரமாதித்தன்|விக்கிரமாதித்தனுடன்]] போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் [[கேந்தூர்க் கல்வெட்டு|கேந்தூர்க் கல்வெட்டும்]] கூறுவது குறிப்பிடத்தக்கது.
 
== ரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார் ==
 
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் [[சேரமான் பெருமாள் நாயனார்]] [[மதுரை|மதுரைக்கு]] வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். [[திருஆலவாய்]] இறைவனையும், [[திருப்பரங்குன்றம்|திருப்பரங்குன்ற]] பெருமானையும் பின் வணங்கினார் எனப் [[பெரிய புராணம்]], [[சுந்தரர் தேவாரம்|சுந்தரர் தேவாரமும்]] கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
(பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).
 
"https://ta.wikipedia.org/wiki/ரணதீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது