"அண்ணா சாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
'''அண்ணா சாலை''' [[சென்னை]]யில் ஒரு முக்கிய [[சாலை]] ஆகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]]யும் [[கிண்டி]]யையும் இணைக்கும். 15 [[கிமீ]] நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் '''மவுண்ட் ரோட்''' (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், [[அண்ணா மேம்பாலம்]] மேல் அண்ணா சாலை போகும். [[கா. ந. அண்ணாதுரை]]யுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது. <br />
<br />
அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் [[செயின்ட் தாமஸ்]] வீற்றிருக்கும் புனித நகரான [[பரங்கிமலை மற்றும் பல்லாவரம்|செயின்ட் தாமஸ் மவுண்ட்மவுண்டுக்கு]]-கு <ref>[http://wikimapia.org/#lat=13.005739&lon=80.1937258&z=17&l=42&m=b&show=/7659130/ta/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 பரங்கிமலை]</ref> பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். இச்சாலையின் தற்போதைய வடிவமானது, முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்னே பணியாற்றியக் காலத்தில் உருவானது. [[சென்னை]]யில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலையில் தான் அமைந்துள்ளன.<br />
<br />
இதன் நெடுகிலும் நீட்டிக்க பல மேம்பாலத் திட்டங்கள் முன்மொழிந்து வருகின்றது. இருப்பினும், தற்போது அண்ணா சாலையின் இடை நெடுகிலும் அமைக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி நடைபெறுவதால் பெரும்பாலும் அந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
 
* நேரு சிலை (கத்திப்பாரா குறுக்கு சந்திப்பு)
 
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
 
[[பகுப்பு:சென்னை சாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/949523" இருந்து மீள்விக்கப்பட்டது