திருமுழுக்கு யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
 
==குழந்தைப் பருவம்==
[[File:InfantJesus JohnBaptist.JPG|thumb|250px|right|''குழந்தைகளாக இயேசுவும்[[இயேசு கிறித்து|இயேசு]]வும் (இடது), யோவானும்''. ஓவியர்: பர்த்தொலோமே முரில்லோ]]
திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்"<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:76-77</ref> என்று இறைவாக்கு உரைத்தார்.
 
[[லூக்கா நற்செய்தி]]யின் குறிப்புகள், இயேசுவின் தாய் மரியாவும்[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்<ref name="உறவு"/> என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர்.
 
பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:76-77 'குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.'</ref> தற்கால அறிஞர்கள், பாலைநிலத் துறவிகளாக வாழ்ந்த எஸ்சேனியர்களில் ஒருவராக யோவானும் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இயேசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த பாலைவனத் துறவிகள், தனிமையில் கடவுளை தியானித்து வந்ததோடு [[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] மனமாற்றத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மனமாற்றத்திற்கு அடையாளமாக [[திருமுழுக்கு]] பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே<ref>Harris, Stephen L. (1985) ''Understanding the Bible''. Palo Alto: Mayfield; p. 382</ref> என்று நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது