"திமிங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

505 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==சுவாசித்தல்==
உண்மையில் திமிங்கலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட [[பாலூட்டிகள்]] என்ற விலங்கினங்களாகும். திமிங்கலங்கள் [[நீர்|நீரில்]] வசிப்பினும் அவை மற்ற [[மீன்|மீனினங்களை]] போல செவுள்களால் சுவாசிப்பதிலை. அவை நம்மைபோல் [[நுரையீரல்|நுரையீரலைக்]] கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் [[மூக்கு]] வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
திமிங்கலங்கலங்களின் [[நுரையீரல்]] மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு [[காற்று|காற்றை]], தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக்கொண்டுஉள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது [[மூக்கு]] வழியாக [[நீர்]] உள்ளே நுழையாமல் இருக்க மூடி உள்ளது. சில திமிங்கலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டுள்ளன.
திமிங்கலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. ஸ்பெர்ம் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும்.
திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதய துடிப்பு மற்றும் [[ஆக்ஸிஜன்]] உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள [[ஆக்ஸிஜன்]] மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது.
இவ்வாறு ஒருமுறை காற்றை [[நுரையீரல்|நுரையீரலில்]] நிரப்பிக்கொண்டு திமிங்கலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனை]] எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/953790" இருந்து மீள்விக்கப்பட்டது