நடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் '''நடுகல்''' எனப்படுகின்றது. இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட [[பண்பாடு|பண்பாட்டைச்]] சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் [[பெருங்கற்காலம்]] முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. [[இந்தியா]]விலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், [[வீரச்சாவு]] அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
 
==சங்ககாலத்தில் நடுகல்==
==இந்தியாவில் நடுகற்கள்==
இந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம் தொடக்கம் தெற்கில் கேரள மாநிலம் வரை காணப்படுகின்றன. வடக்கில் இமாச்சலப் பிரதேசம், குசராத், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 202 கற்களும், ஆந்திராவில் 126 கற்களும், கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன.
 
==தமிழ்நாட்டில் நடுகற்கள்==
தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. [[செங்கம்]], [[தருமபுரி]] ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான்கள் போன்ற சிற்றரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகிறது. தமிழ் நாட்டில் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்திலும், கங்கர், பாணர், இராட்டிரகூடர் போன்ற அரச மரபினர் காலத்திலும், பிற்காலத்தில் ஒய்சள, விஜயநகர, நாயக்க மரபினர் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
===சங்ககாலத்தில் நடுகல்===
மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டுவருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று,பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம்.இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப்பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன.
சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.([[அம்மூவனார்]] - [[அகநானூறு 35]])
===வினையழி பாவை===
:போர்முனையில் வீழ்ந்தோருக்கு அவர்கள் போரிட்ட மன்றத்தில் பாவைப்பொம்மை செய்து வைப்பார்களாம். அந்தப் பொம்மை மழையில் கரைந்தும் வெயிலில் காய்ந்தும் செயத அதன் அழகு அழிந்துபோகுமாம். இதுதான் வினையழி பாவை. (கல்லில் பெரும் பீடும் எழுதி வைத்தால் அது நடுகல் எனப்படும். மண்ணில் உருவாரம் செய்து வைத்தால் அது பாவை எனப்படும்.) - ([[வேம்பற்றூர்க் குமரனார்]] அகநானூறு 157)
 
==தமிழ்நாட்டில்தற்கால நடுகற்கள்==
[[படிமம்:Monument-India-TamilWord21.jpg|right|250px|தமிழகத்தில்1972ஆம் ஆண்டு நடந்த உழவர் போராட்டத்தில், இறந்தவர்களின் நினைவாக எழுப்பப் பட்ட '''நடுகல்''' = '''வீரக்கல்'''.|thumb]]
 
தமிழ் நாட்டிலும் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
 
 
தற்காலத்திலும் பொது மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு இறப்போருக்காக நடுகற்களைப் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படுவது உண்டு. இவை கற்களினால் அல்லது காங்கிறீட்டினால் கட்டப்படுகின்றன. எனினும் இவற்றைத் தற்போது நடுகற்கள் என்று குறிப்பிடுவது இல்லை.
 
==உசாத்துணைகள்==
* கிருஷ்ணமூர்த்தி, ச., நடுகற்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2004.
* கேசவராஜ், வெ., தென்னிந்திய நடுகற்கள், காவ்யா, சென்னை, 2008.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது