"பேச்சு:அல்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,038 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
கொந்தாழை என்னும் போது என்னவோ தாழை போன்ற பெரிய தாவரங்களைக் குறிப்பது போன்று தோன்றுகிறது. மேலும், அல்கா என்று பயன்படுத்தும் வழக்கம் இலங்கையில் உள்ளது. தமிழ்நாட்டில் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றதென அறியேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] 16:13, 17 திசம்பர் 2011 (UTC)
 
:::இக்கட்டுரை "பாசி" என்று இருப்பதே சரியாகப்படுகிறது. தமிழ்நாட்டு பாடப்புத்தகங்களில் "பாசி" மற்றும் "அல்கா" இரு பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்கா என்பது ஆங்கிலத்தின் "Algae" என்பதின் ஒலிபெயர்பே தவிர தமிழ் சொல் அன்று! மேலும் இன்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏரி, குளம் மற்றும் ஓடைகளில் வளரும் Algaeகள் பாசிகள் என்ற பெயரே மக்களால் வழங்கப்படுகிறது. பாசி என்ற சொல் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இச்சொல் குற்றாலக்குறவஞ்சியில் ஓடையில் வளரும் நன்னீர் பாசியை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது (தற்போது அப்பாடல் எதுவென்று நினைவில் இல்லை, விரையில் இங்கு தருகிறேன்). Moss என்பதற்கு இணையான தமிழ் பெயர் இல்லை என்றே தெரிகிறது? Moss கற்களிலும், மரங்களில் கிளைகளிலும் வளரும் ஒரு liverwort (ஈரலுருத்தாவரம்) ஆகும், இது Bryophyte (கலனிழையம்[vascular tissue] இல்லா தாவரம்) வகையை சார்ந்தவையாகும். என்னுடைய கருத்துப்படி Mossகளுக்குக்கென்று தமிழ் பெயர் இருந்ததாக எனக்கு தெரியவில்லை, ஆனால் இருக்க வாய்ப்புண்டு ஏனெனில் தமிழர்கள் பல சிறிய தாவரங்களுக்கும் பெயர் வழங்கியுள்ளார்கள். Mossகள் பல இடங்களில் எளிதில் காணப்படும் ஒரு தாவரம். கொந்தாழை என்னும் சொல் seaweed என்பதை குறிக்கும். இத்தாவரம் பெரியதாகவும் மற்றும் பயன்பாட்டில் (உணவு மற்றும் மருத்து) இருப்பதால் இதற்கென்று தனிபெயர் வழங்கப்பட்டு இருக்கலாம். கொந்தாழைகள் ஒரு வகையான் பாசிகள் என்பது சமீபத்தில் (200 ஆண்டுகளுக்குள்) கண்டுபிடுக்கப்பட்டவை. என்னுடைய கருத்துப்படி தமிழர்களின் வகைப்பாட்டியல் அறிவு பயன்சார்ந்தாகும் அறிவியல் சார்ந்ததன்று. பல ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த நாகரிகங்கள் அனைத்தும் இத்தகைய வகைப்பாட்டியலையே கடைபிடித்துவந்துள்ளது. '''அறிவியற்படி "Algae" என்பதற்கு "பாசி" நிகரான சொல்லாகும்
'''
 
==அகரமுதலிகளில்==
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/955201" இருந்து மீள்விக்கப்பட்டது