நாதமுனிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வைணவ இறையியலாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''நாதமுனிகள்''' பத்தாம் நூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:13, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நாதமுனிகள் பத்தாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்த ஒரு ‌வைணவப் பெரியார் மற்றும் தமிழறிஞர் ஆவார். இன்றைய கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுமன்னார் கோயில் பகுதியில் அந்தணக்குடும்பத்தில் நாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர் இவர். ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் (நம்மாழ்வார்) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த இடத்திற்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்தார்.

3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடலகள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களைத் பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவுரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதமுனிகள்&oldid=955737" இலிருந்து மீள்விக்கப்பட்டது