அரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வைணவ சமயம்" (using HotCat)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அரையர்''' என்போர் [[வைணவம்|வைணவக்]] கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப்]] பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி '''அரையர் சேவை''' என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை திராவிட வேதம் தொகுத்த நாத முனிகள்[[நாதமுனிகள்]] துவக்கி வைத்ததாக நம்பப்படுகிறது. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை பூவுலக வைகுண்டம் எனப்படும் [[திருவரங்கம்|திருவரங்கத்]] திருநகரில்தில் துவக்கப்பட்டது. ஓதுவார்களைப் போல அரைய‌ர்களைப் பரிபாலிப்பார் இல்லாது போனமையால் அரையர் குடும்பங்கள் நசிந்து போயின. இன்று திருவரங்கம் மற்றும [[நாங்குநேரி]]யில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. <!--அரையர் சேவை நிகழ்ச்சிக்கான கட்டற்ற உரிமைப் படம் கிடைத்தால் நல்லது. -->
 
அரையர் சேவையின் போது அரையர்கள் கூம்பு வடிவத் தொப்பி<!-- இதற்கோர் பெயர் இருக்கிறது. அறிந்தோர் சேர்க்க-->யும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையையும் அணிந்திருப்பர்.
 
[[பகுப்பு:வைணவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/அரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது