"பேச்சு:அல்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
:கிராமிய வழக்கில் Hydrilla, valicinaria, algae என பெயர் பிரிக்கமுடியாத எல்லாவற்றையும் பாசி என அழைக்கிறார்கள். "தூசியின்றித் தெளிந்தோடும் துறையினிலே நான் மூழ்கித் தொட்டதேதொ பாசி என்றெண்ணிக் கையாலே பறித்தெறியப் பற்றினேனா" என்பார் [[நீலாவணன்]]. ஆயினும் அறிவியல் ரீதியில் இத்தகைய பெயரீடு குழப்பத்தையே உண்டுபண்ணும். சரியான சொல் பொருந்தாதவற்றுக்கு ஆங்கில ஒலிப்பெயர்ப்பை பயன்படுத்துவதே சரி.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] 09:06, 18 திசம்பர் 2011 (UTC)
 
::::தமிழில் "நன்னீர் பாசிகள்" என்ற புத்தகமே உள்ளது (1960களில் வெளிவந்தது). நீரிலும், நீரில் உள்ள கல், மக்கும் மரங்களில் வாழும் பச்சை/பளுப்பு நிற உயிரிகளையே பாசி என்றழைக்கிறோம். Mossess எப்பொழுதும் பாசிகள் என்று அழைக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இக்கலந்துரையாடலுக்கு மேலும் குழப்பம் சேர்க்க நான் இங்கு lichens பற்றியும் குறிப்பிடவிரும்புகிறேன் :). lichensயை கற்பாசி/பாசிக்காளான்/மரப்பாசி என்று அழைக்கப்படுகிறது (Algae, Mosses, Lichens அனைத்தும் படிவளர்ச்சியில் மிக நெருங்கிய தொடர்புடையவையாகும்). இவ்வாறாக பச்சை/பளுப்பு நிறத்தில் வளரும் அனைத்தும் பாசிகள் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம்! தற்போதைய குழப்பம் நீங்க Mossesக்கு வேறு ஏதேனும் பெயர் உள்ளதா என்று கண்டுபிடிக்கலாம். வேறு பெயர்கள் ஏதும் இல்லையெனில் நாமே கலந்துரையாடி ஒரு புதிய பெயரை உருவாக்கலாம். தமிழில் அனைத்து உயிரிகளுக்கும் பெயர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
 
செந்தில் கூறியது போ�லபோல Algae என்ற சொல் "ˈælɡə" என்ற இலத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் phycos (φῦκος-கிரேக்கம்) என்ற சொல்லும் பாசிகளை குறிக்க வழக்கப்பட்டுள்ளது (கவனிக்க: Phycology: is the scientific study of algae). ælɡə மற்றும் φῦκος என இரண்டும் முறையே இலத்தின் மற்றும் கிரேக்கத்தில் Seaweeds குறிக்க பயன்பட்ட சொற்களாகும். இப்பெயர்கள் தமிழின் "கொந்தாழை" நிகரான பெயர்களே ஆகும். பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த உயிரிகளுக்கு மட்டுமே பெயர்கள் இருந்ததை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இலத்தின் மற்றும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலம் பெறப்பட்டதால் Algae மற்றும் Phycos பாசிகளை குறிக்க நிலைத்துவிட்டது. மனிதர்களுக்கு முதன்முதலில் தெரிந்து பாசி கொந்தாழை (Seaweeds), 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நுண்ணோக்கியின் வளர்ச்சியால் பல்லாயிர கணக்கான நுண்பாசியினங்கள் கண்டுபிடித்து அறியப்பட்டது. முதன்முதலில் அறியப்பட்ட Seaweedsயின் பெயரே அனைத்து பாசிகளின் பொது பெயராக அறியப்பட்டுவருகிறது. �AlgaeAlgae என்பதற்கு நிகரான பாசி என்ற சொல்லை மாற்றுவதன் மூலமோ அல்லது Mossessயை பாசியினத்தில் புகுத்துவதால் நாம் குழப்பத்தை விளவிக்க நேரிடலாம் என்பது என் கருத்து. --[[பயனர்:Karthickbala|கார்த்திக்]] 05:26, 19 திசம்பர் 2011 (UTC)
 
==அகரமுதலிகளில்==
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/956226" இருந்து மீள்விக்கப்பட்டது