வன்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: வன்னி எப்னபது காட்டைக்குறிக்கப் பயன்பாட்டில் உள்ள பதமாகும் இது பின்...
 
No edit summary
வரிசை 4:
* [[வன்னிப் பெருநிலப்பரப்பு]]- மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பகுதி
* [[வன்னி நாடு]]- இலங்கையில் முன்பிருந்த ஒரு இராசதானி
 
 
தமிழீழத்தில் வன்னிவள நாடு வளம் பல கொண்ட செழிப்பு மிகு பகுதி. ஆதித் தமிழர் வாழ்ந்த பிரதேசங்களுள்ளே வன்னி நாடு முதன்மையானது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் வன்னி வள நாட்டின் வரலாறு திட்டவட்டமாக இதுவரை யாராலும் எழு தப்படவில்லை.
 
வன்னி வள நாட்டின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து காலவரன்முறைப்படி ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை எழுத வரலாற்றாய்வாளர்கள் முன் வரவேண்டும். இப்பிரதேச மக்களின் வாழ்வியல் தனித்துவமானது. ஆனாலும் சமகால நிகழ்வுகளால் மரபுரீதியான வாழ் வியல் அம்சங்கள் திரிபடைகின்றன அல்லது அழிந்தொழிகின்றன.
 
 
பயவுணர்வோடு கூடிய வாழ்க்கை, இடப்பெயர்வுகள், அகதிமுகாம் வாழ்க்கை, பொருளாதார நிலைமை தொடர்பான கட்டுப்பாடுகள், ஆழிப் பேரலைத் தாக்கம் என்பவற்றினால் வாழ்வியலில் உள்ள தனித்துவம் இழக்கப்படுகின்றது. நம்முன்னோரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டுக் கோலங்கள் பற்றி அறிய முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. சமகாலத்திற்குப் பிந்திய தலை முறையினர் வாழ்வியலின் சிறப்புக்கள் பற்றி அறிய முனையாத துர்ப்பாக்கியநிலை இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. கட்டுரைகள், நூல்கள் மூலமாவது தெரியப் படுத்த வேண்டிய தேவை இன்றுள்ளது. வன்னி வளநாடு என்னும் பெருநிலப் பரப்பில் இன்றைய முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்கள் உள்ளடக்கப்படுகின்றன. இம் மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியங்கள் ஆதார பூர்வமாக அறுதியிட்டுக் கூறமுடியாத அளவுக்கு ஆய்வுகள் நிகழவில்லை. வரலாற்றுச் சான்றுகள் ஆங்காங்கே நிறையக் காணப்படுகின்றன. அவற்றை அகழ்ந்து, தேடிப்பெற்று ஒப்புநோக்கி வன்னிக்கென தனியான வரலாறு எழுதப்படாதது. நடுக்காட்டுப்பகுதிகளிலும் குளங்களிலும் இடிபாடுகள், சிதைவுகள் என்பன இன்னும் காணப்படுகின்றன. காலஞ்செல்லச் செல்ல இவை அழிந்தொழிந்துவிடுவன. எனவே இத்தேவையை யார் நிறைவு செய்யப் போகின்றார்கள் என்பதுதான் இன்றைய கேள்வி.
 
வன்னிவள நாடு, பண்டைத் தமிழர் வாழ்வியலில் இடம்பெற்ற ஐவகை நிலங்களுள் முல்லை, மருதம், நெய்தல் நிலவளங்களும், அந்நிலங்களுக்குரிய வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளன. கடல்வளமும், காட்டுவளமும், வயல்நிலங்களும் நிறையவுண்டு. பொன் கொழிக்கும் நிலப்பரப்புக்கள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. தண்ணிமுறிப்புக்குளம்(குருந்தவாவி), கட்டுக்கரைக்குளம் (இராட்சதகுளம்), வவுனிக்குளம், முத்தையன்
கட்டுக்குளம், இரணைமடுக்குளம் ஆகியவை இன்றைய பாரிய நீர்த்தேக்கங்களாகும். இவற்றுள் பல குளங்கள் பலநூறு ஆண்டு களுக்கு முன் எம்முன்னோரால் கட்டுவிக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகின்றன. வவுனிக் குளத்தை எல்லாள மாமன்னன் கட்டு வித்தான் என்றும் கூறப்படுகின்றது. கடற்றொழில், கமத்தொழில், மந்தைமேய்த்தல், வேட்டையாடுதல் ஆகிய தொழில்கள் வன்னி
வள நாட்டில் முக்கிய தொழில்களாக இருந்துள்ளன. இத் தொழில்களை மேற்கொண்ட மக்கள் செல்வந்தர்களாக மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்து வந்துள்ளனர். வன்னிவள நாட்டின் வாழ்வியல் என்றவுடன் நம் கண்முன்னே நிற்பவை நாட்டார் பாடல்களும், நாட்டுக் கூத்துக்களுமாகும். மரபு
வழிக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என்பவற்றையும் நாட்டார் வழக்கியல் என்பதற்குள் அடக்கலாம். இவை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுவதுண்டு. சிறப்பாக முல்லைத்தீவுப் பிர
தேசத்திற்கு குறித்துச் சொல்லக் கூடிய தனித்துவம் உண்டு.கிராமியப் பண்புகள் மாற்றமடைந்து கொண்டு சென்றாலும் சில தனித்துவமான கிராமங்களைக் கொண்டதாகச் சில மாவட்டங்
கள் இருக்கின்றன. சிறுசிறுகுளங்களும் அவற்றோடு அண்டிய குடியிருப்புக்களையு முடையதாக சில கிராமங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் குளங்களின் பெயரோடுடைய கிராமங்களாக இன்றும் வழங்கப்படுகின்றன. பன்றிக்கெய்த குளம், மரையடித்த குளம், கொம்புவைத்த குளம், பெரிய குளம், சின்னக்குளம் என்பனவற்றைக் குறிப்பிடலாம். வேறும் மோட்டை, மடு, முறிப்பு என்பவற்றோடு கூடிய கிராமப் பெயர்களும் உள்ளன. சிறுகுளங்களின் கீழுள்ள வேளாண்மை நிலப்பரப்புக்கள் குறிப்
பிட்ட ஒரு பரம்பரையினருக்கே சொந்தமாக இருந்துள்ளன. அது போன்று கடற்றொழிலோடு தொடர்புடைய வலைஞர் மடம், வெட்டுவாய்க்கால், கரை நாட்டுக்கேணி, கொக்குளாய், கொக்குத்
தொடுவாய் ஆகிய கிராமப் பெயர்களையும் குறிப்பிடலாம்.எனவே தனித்துவமான கிராமியப் பண்புகள் கொண்ட வாழ்வியல் அம்சங்களையுடைய பகுதியாக இருந்து வந்துள்ளது. கிராமியத்தின் இன்னோர் பண்பு பயிர்ச்செய்கையும் அதனோடிணைந்த வாழ்க்கை முறைகளுமாகும். இக்கிராம மக்களுக்கும் ஓய்வு நேரங்களும் நிறையவிருந்தன. பண்டைத்தமிழர் பண்பாட்டிலும் மருத நில மக்கள் தமது ஓய்வு நேரங்களை ஆடல், பாடல்களில் செலவிட்டனர். அதுபோன்றே இப்பகுதி கிராம மக்களும் தமது ஓய்வுநேரங்களை கலை முயற்சிகளில் செலவிட்டனர். நாட்டார் பாடல்களை இசைத்தல், நாட்டுக் கூத்துக்களை அரங்கேற்றுதல், கிளித்தட்டு, தாச்சி, வார் ஓடுதல், மகுடி விளையாடுதல் முதலிய விளையாட்டுக்களில் தமது ஓய்வு நேரத்தைச் செலவிட்டனர். எனவே வன்னிவள நாட்டு மக்களின் தொழில்முறைகள் கலை ஆக்க வெளிப்பாடுகளுக்கு வழிவகுப்பதை நோக்கலாம்.
 
வன்னிவள நாட்டு மக்களின் நாட்டார் வழக்கியல் நாட்டார் பாடல்கள் சிறப்பான இடத்தைப் பெறுவதை நோக்கலாம். நாட்டார் பாடல்கள் பல பேராசியர் சு வித்தியானந்தன், செ. மற்றாஸ் மயில் ஆகியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. ஏட்டு வடிவிலும், வாய்மொழியாகவும் அச்சு வாகனமேற்றப்படாத பாடல்கள் உள்ளன. அத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் வெளிக்கொணரப்படாத வற்றைத் தேடிப் பெற்றுத் தொகுத்து வெளியிடவேண்டியது காலத்தின் தேவையாகும். வன்னிவள நாட்டின் நாட்டார் பாடல்கள் தொழில்சார் பாடல்
கள், வரலாற்றுக் கதைப்பாடல்கள், சமயச்சார்பான பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள் என வகைப்படுத்தலாம். விவசாயத்தோடு தொடர்புடைய பாடல்கள், கடற்றொழிலோடு தொடர்புடைய பாடல்களை தொழில்சார் பாடல்களுள் அடக்கலாம். பள்ளு, சிந்து வகையான பாடல்கள் அரிவி வெட்டும்போது பாடப் படும் பாடல்கள். ஷஷஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக் காது|| என்பதற்கிணங்க பலர் ஒன்று சேர்ந்து அரிவி வெட்டும் பாடல்கள் இவை. அவ்வாறு அரிவி வெட்டுதல் பண்டைக்காலத் தில் பரத்தை வெட்டுதல் என அழைக்கப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வன்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது