ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Mgrshotat.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No s...
வரிசை 2:
 
==எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு==
 
[[Image:Mgrshotat.jpg|thumb|300px|துப்பாக்கிச் சூட்டையடுத்து [[சென்னை]] பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தேர்தலில் போட்டியிட [[வேட்பு மனு]] பதிவு செய்தார்.]]
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது [[காது|காதருகே]] சுடப்பட்டார். இராதாவின் [[உடல்|உடலில்]] நெற்றிப் பொட்டிலும் [[தோள்|தோளிலுமாக]] இரு குண்டுகள் பாய்ந்தன. [[மருத்துவமனை]]யில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.