சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Kamarajar.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...
சி "Mgrshotat.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No s...
வரிசை 46:
==அரசியல் நிலவரம்==
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962 தேர்தலுக்குப்பின்]] தமிழ் நாடு காங்கிரசு பலமிழக்கத் தொடங்கியது.<ref name="Hardgrave"/> 1962 இல் எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த [[காமராஜர்]] பதவி விலகினார். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவர் பொறுப்பேற்று [[டெல்லி]] சென்று விட்டார். அவருக்கு பதிலாக முதல்வரான [[எம். பக்தவத்சலம்|பக்தவத்சலத்திடம்]] காமராஜரின் நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் இல்லை. 1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காங்கிரசு அரசு மக்களின் அதிருப்தியை சம்பாதித்தது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.<ref name="Hardgrave">{{Cite journal| first = Robert L. Hardgrave, Jr.| title = The DMK and the Politics of Tamil Nationalism| journal = Pacific Affairs| volume = 37| issue = 4| pages = 410| publisher = Pacific Affairs, University of British Columbia| date = Winter, 1964-1965| url = http://www.jstor.org/stable/2755132?seq=15&Search=yes&term=1967&term=elections&term=Nadu&term=Tamil&list=hide&searchUri=%2Faction%2FdoBasicSearch%3FQuery%3D1967%2BTamil%2BNadu%2Belections%26x%3D0%26y%3D0%26wc%3Don&item=9&ttl=125&returnArticleService=showArticle&resultsServiceName=doBasicResultsFromArticle| accessdate = 16 November 2009}}</ref>
 
[[படிமம்:Mgrshotat.jpg|left|thumb|250px|குண்டடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம். ஜி. ஆர். தேர்தல் வேட்புமனு ஆவணங்களைப் பூர்த்தி செய்கிறார்]]
1965 ஆம் ஆண்டு [[இந்தியா|இந்தியாவின்]] [[இந்தியாவின் ஆட்சி மொழிகள்|தனி ஆட்சி மொழியாக]] [[இந்தி|இந்தியைக்]] கொண்டு வர நடுவண் அரசு முயன்றது. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்]] கூறியுள்ளபடி 1965 வரை ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர். மாணவர்கள், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|போராட்டத்தில்]] ஈடுபட்டனர். ஜனவரி-பிப்ரவரி 1965 இல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும் இந்தியை ஆதரித்து, போராட்டத்தை கடுமையான முறைகளை கையாண்டு ஒடுக்கினர். இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.<ref name="Kanchan Chandra"/> முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகளை இப்போராட்டம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.<ref name="hindu1">{{Citation| title = The competitive politics of rice | newspaper = The Hindu| year =2009 | date = 9 April| url = http://www.hindu.com/2009/04/09/stories/2009040956141300.htm| accessdate =16 November 2009}}</ref><ref name="bl">{{Citation| title = The politics of rice | newspaper = The Hindu Business Line| year =2006 | date = 12 May| url = http://www.thehindubusinessline.com/2006/05/12/stories/2006051204201900.htm| accessdate =16 November 2009}}</ref> தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.<ref name="thinnai1"/>
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது