ஜார்ஜ் ஸ்டீபென்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| resting_place = புனித டிரினிடி தேவாலயம், செஸ்டர்ஃபீல்ட்
}}
'''ஜார்ஜ் ஸ்டீபென்சன்'''(George Stephenson) (9 ஜூன் 1781 - ஆகஸ்ட் 12, 1848)கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப் படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 <sup>1</sup>/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அது "ஸ்டீபன்சன் பாதை" என அழைக்கப்படுகிறது.
==இளமை==
ஜார்ஜ் ஸ்டீபென்சன் [[இங்கிலாந்து]] நாட்டிலுள்ள நார்தம்பர்லேண்ட் பகுதியைச் சேர்ந்த வைலம் என்ற ஊரில் 1781-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் இராபர்ட். தாய் மேபல். இவர்களுக்கு இரண்டாவது மகனாக ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்தார். இவருடைய தந்தை நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தந்தை குறைந்த கூலியைப் பெற்று வந்ததால் குடும்பத்தில் வறுமை காரணமாக இவரால் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் மாடு மேய்ப்பது இவருடைய பணியாக இருந்தது. பிறகு பதினேழு வயதான போது, தந்தையுடன் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றினார். இங்கு கிடைத்த கூலிப்பணம் இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்வி பெற இவருக்கு உதவியாக அமைந்தது. இவர் படிக்க ஆரம்பித்ததும் அதன் காரணமாக இவருடைய பணியின் தன்மையும் உயர்ந்தது. 1802 -இல் இவர் பிரான்சஸ் ஹென்டெர்சன் என்ற மங்கையை மணம் செய்து கொண்டார். பின்னர் வில்லிங்டன் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்தார். அங்கும் ஒரு சுரங்கத்தில் பணிபுரிந்தார். பணி நேரம் போக மற்ற நேரங்களில் காலணிகளைத் தயாரிப்பது கடிகாரங்களைச் செப்பனிடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். இவை ஜார்ஜ் ஸ்டீபென்சனுக்கு அதிக வருமானத்தை அளித்தன. 1803-ல் இவருக்கு இராபர்ட் என்ற மகன் பிறந்தான். 1804-ல் கில்லிங்வொர்த் என்ற பகுதியைச் சேர்ந்த வெஸ்ட்மூர் என்ற ஊரில் குடியேறினார். அங்கு இவர் பணியாற்றுகையில் இவ்வினையருக்க ஒரு மகள் பிறந்து சில வாரங்களில் இறந்துவிட்டார். 1806-ல் இவருடைய மனைவியும் காலமானார்.இதன் பிறகு இவருக்கு [[ஸ்காட்லாந்து]] சென்று பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது அப்போது தனதுமகன் இராபர்டை தனது சகோதரி எலினர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். இவர் ஸ்காட்லாந்து சென்ற சில மாதங்களுக்குப் பிறகு இவருடைய தந்தைக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் கண்பார்வை பறி போனது. எனவே இவர் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. 1820-l ல் இவர் விவசாயி ஒருவரின் மகளான எலிசபெத் ஹின்ட்மார்ஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. குறுகிய காலமே வாழ்ந்த எலிசபெத் 1825-ல் மரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஸ்டீபென்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது