பீமாசங்கர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பீமாசங்கர் கோயில், போர்கிரி, பீமாசங்கர் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: மற்ற ம...
சிNo edit summary
வரிசை 9:
}}
 
'''பீமாஸ்கந்தர் கோயில்,''' போர்கிரி(''Bhimashankar Temple'') [[புனே]]க்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள [[போர்கிரி]] என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் [[சாஹ்யாத்திரி குன்று]]களில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே [[பீமா ஆறு]] உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று [[ராய்ச்சூர்|ராய்ச்சூருக்கு]] அருகில் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கத்]] தலங்களுள் ஒன்றாகும்.
 
இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப் போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை.
வரிசை 15:
பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் [[நாகரக் கட்டிடக்கலை]]ப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் [[நானா பட்னாவிஸ்]] என்பவனால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் [[கருவறை]]யும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[இலக்கியம்|இலக்கியங்களில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:மகாராட்டிர இந்துக் கோயில்கள்கோவில்கள்]]
 
[[en:Bhimashankar Temple]]
"https://ta.wikipedia.org/wiki/பீமாசங்கர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது