ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
நோய் நுண்மக் கொல்லி மருந்தாக கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தி நோய்நுண்மத் தடுப்பு முறாஇகளின் புதிய தொகுதியொன்றை லிஸ்டர் வகுத்தார். இதன்படி ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் அவர் தமது கைகளைத் தூய்மையாகக் கழுவிக்கொண்டார். அது மட்டுமின்றி, அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளும், கட்டுத்துணிகளும் கூட முற்றிலும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அறுவை சிகிச்சை அறையில் சிறிது நேரம் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இந்த முறைகளினால், அறுவை சிகிச்சைக்குப்பிறகு மரணங்கள் வெகுவாகக் குறைந்தன. ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 1861-1865 -ல் 45% க்கு இருந்த இறப்போர் அளவு, 1869 -ல் 15% அளவுக்குக் குறைந்தது.
==ஆய்வு==
நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சை பற்றிய லிஸ்டரின் முதலாவது முக்கிய ஆய்வுக்கட்டுரை 1867 ஆம் ஆண்டில் வெளியானது. இது பற்றிய கருத்துகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும் 1869 ஆம் ஆண்டின் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. 1875 ஆம் ஆண்டில் இவர் ஜெர்மனியில் சுற்ருப்சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகள் குறித்தும், முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் அமெரிக்கவிலும் எவர்இவர் இதே போன்ற சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். எனினும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு இவருடைய முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை.
1877 ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைத் துறாஇயின் தலைவராக பதவியில் நியமிக்கப்பட்டார். இப்பதவியை இவர் 15 ஆண்டுகள் வகித்தார். அப்போது இவர் லண்டனில் தமது நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறைக்கு பலமுறை செயல் விளக்கம் செய்து காட்டினார். அதன் பின்னர் இவருடைய முறையில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டினர். இவருடைய கொள்கைகள் மேன்மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. லிஸ்டரின் வாழ்நாள்கலிலேயே அவருடைய நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறையினை உலகெங்குமுள்ள மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
==சிறப்புகள்==
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது